ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 135 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, அவர் ஆந்திர மாநிலத்தின் முதல்வராக நான்காவது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
இதையடுத்து சந்திரபாபு நாயுடு குடும்பத்தினரால் நடத்தப்படும் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு சாதனைஉச்சத்தை தொட்டது. ஹெரிடேஜ்ஃபுட்ஸ் பங்குகளின் விலை இரண்டு வாரங்களில் இரண்டு மடங்கு அதிகரித்தது. இதனால்,அந்த நிறுவனத்தில் 35.7 சதவீதபங்குகளை...
பிரதமர் மோடி தனது அணுகு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் நேற்று தொண்டர்களிடையே பேசும்போது தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க முதன்முறையாக கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு நேற்று வருகை தந்தார். வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் அவ்விரண்டிலும் வெற்றிபெற்றார். இதையடுத்து, அவர் எந்த தொகுதியில் தனது...
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் கந்தர்பால் மாவட்டம் துல்முல்லா கிராமத்தில் கீர் பவானிஅல்லது ரங்யா தேவி கோயில்உள்ளது. தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள கீர் பவானியை காஷ்மீர் பண்டிட்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர். அங்கு வரும் 14-ம்தேதி வருடாந்திர திருவிழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு திருவிழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட்கள் உட்பட 80 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்...
ஆந்திராவின் தலைநகரம் அமராவதிதான் என, ஆந்திர மாநிலமுதல்வராக இன்று பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு உறுதிபட தெரிவித்தார்.
ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம்தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகளைச் சேர்ந்த 162 எம்எல்ஏ.க்கள் பங்கேற்றனர். இதில் ஆந்திர மாநில சட்டப்பேரவை தெலுங்கு தேசம் கூட்டணி கட்சிகளின் தலைவராக சந்திரபாபுநாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்....
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருவேறு இடங்களில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளன. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். அதேநேரம், 6 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று மட்டுமே இரண்டு தீவிரவாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் நேற்று இரவு ராணுவ தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
தற்போது...
24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை: ஒடிசாவின் புதிய முதல்வருக்கு பங்களா தேடும் அதிகாரிகள்
admin - 0
கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின்முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கிற்கு அரசு குடியிருப்பு இல்லை. சொந்த வீட்டில் வசித்து வந்தார். இதனால் பாஜகவின் புதிய முதல்வருக்காக அம்மாநில அதிகாரிகள் அரசு குடியிருப்பை தேடி வருகின்றனர்.
கடந்த 2000-ம் ஆண்டில் ஒடிசா முதல்வரானார் நவீன் பட்நாயக். அப்போது அவர் அரசு குடியிருப்பிற்கு மாறவில்லை. அவர், தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான பிஜு பட்நாயக், புவனேஸ்வரில் கட்டிய புதிய பங்களாவில் குடியிருந்தார். ‘நவீன்நிவாஸ்’ எனும்...
சந்திரபாபு நாயுடு தலைமையில் பதவியேற்க உள்ள அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் உள்ளிட்ட 24 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பவன் கல்யாண் துணை முதல்வராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது.
ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா...
உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் தோல்வி குறித்து அதன் தேசிய தலைமைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில், தொகுதிகளில் கட்சியினரும், தலைவர்களும் செய்த சதியும், நம்பிக்கை துரோகமும் தோல்விக்கானக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது முடிந்த மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் 80 தொகுதிகளில் அதிக வெற்றியை பாஜக எதிர்பார்த்தது. ஆனால், எதிர்பார்க்காத வகையில் 33 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது. இதன் கூட்டணிகளில் ராஷ்டிரிய லோக் தளம் 2 மற்றும் அப்னா தளம் 1...
சிக்கிம் முதல்வராக சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங்தமாங் (56) தொடர்ந்து 2-வது முறையாக நேற்று பதவியேற்றார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலும் கடந்த ஏப்ரல் 19-ம்தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 32 தொகுதிகளில் பதிவானவாக்குகள் கடந்த ஜூன் 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) 31இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி...
பிரதமர் மோடி அமைச்சரவையில் 5 சிறுபான்மையினர்: முஸ்லிம் சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் இல்லை
admin - 0
பிரதமராக தொடர்ந்து மூன்றா வது முறையாக நரேந்திர மோடி நேற்று முன்தினம் பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் உள்ள71 உறுப்பினர்களில் 5 பேர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் சீக்கியர்கள், இருவர் பவுத்தர்கள், ஒருவர் கிறிஸ்தவர்.
சீக்கியர்களில், பிரதமர் மோடியின் முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்த ஹர்தீப்சிங் புரிக்கு (72) மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபை சேர்ந்த ஹர்தீப் சிங் புரி, 1974-ல்ஐஎப்எஸ் பெற்ற முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி. 2014-ல்...










