Google search engine

குமரியில்: வெற்றி கணக்கை தொடங்காத தவெக

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க தவெக தயாராகி வருகிறது. குமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் திமுக, கூட்டணி...

குமரியில்: கோவில் விழாவில் நீதிபதி விக்டோரியா கெளரி பங்கேற்ப

புதுக்கடை அருகே கூட்டாலுமூடு அருள்மிகு பத்ரேஸ்வரி தேவஸ்தான சித்திரை திருவிழா தொடங்கியது. விழாவின் சமய மாநாடு நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் விக்டோரியா கெளரி துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து அம்மன் பள்ளி வேட்டை இசை தகடு வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. நீதியரசர் வெளியிட...

குமரியில் பெரும் சரிவை சந்தித்த பாரதிய ஜனதா கட்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதாவிற்கான வாக்கு வங்கிகள் நிறைந்த தொகுதிகள் இருந்தபோதிலும், இந்த தேர்தலில் அக்கட்சி பெரும் சரிவை சந்தித்துள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி 5 தொகுதிகளையும், அதிமுக ஒரு தொகுதியையும் கைப்பற்றியுள்ளன. தமாகாவின் எழுச்சியால் நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் போன்ற தொகுதிகளில் பாரதிய ஜனதா...

மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்ல சுவாமி வெற்றி பெற்றார். அவர் வெற்றிச் சான்றிதழை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அழகுமீனாவிடம் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மண்டைக்காடு: பஸ் நிறுத்தத்தில் பெண் மீது தாக்கு – வழக்கு

கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் விமலா (40) நேற்று முன்தினம் லட்சுமிபுரம் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது, அவரது கணவரின் தம்பி கிருஷ்ணகுமார் தகராறு செய்து கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த விமலா குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து...

குமரியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத தவெக

கன்னியாகுமரி மாவட்டம் தேசிய கட்சிகளின் கோட்டையாக திகழ்கிறது. இந்த தேர்தலில், தவெக கட்சி குமரியில் உள்ள 6 தொகுதிகளிலும் போட்டியிட்டது. கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல், பத்மநாபபுரம், நாகர்கோவில் ஆகிய 5 தொகுதிகளில் தவெக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. எந்த...

விளவங்கோடு: காங்கிரஸ் வேட்பாளர் டி டி பிரபின் வெற்றி

விளவங்கோடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட டி.டி. பிரவீன் 69,378 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து தவெக வேட்பாளர் மிக்கேல் குமார் 49,028 வாக்குகளுடனும், பாஜக வேட்பாளர் விஜயதரணி 44,676 வாக்குகளுடனும் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்...

தமிழ்நாடு தேர்தல் 2026: நாகர்கோவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

நாகர்கோவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நாகர்கோவில், தமிழக சட்டமன்றத்தின் 230வது தொகுதியாகும். நாகர்கோவில் மாநகராட்சி முழுமையாக இத்தொகுதியில் அடங்கும். வடிவீசுவரம், வடசேரி நீண்டகரை - ஏ, நீண்டகரை - பி, வேம்பனூர் ஆகிய வருவாய் கிராமங்கள் இத்தொகுதியின் கீழ் வரும். ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியும் இதில்...

குமரி: வாக்கு எண்ணும் மையத்திற்குள் கடும் சோதனைக்கு பின் அனுமதி

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் குமரியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வேட்பாளர்களின் முகவர்கள் கடுமையான சோதனைக்கு பிறகு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வாக்கு எண்ணும் மையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும்...

இரணியல்: கர்ப்பிணி பெண் திடீர் மரணம் – விசாரணை

கண்டன்விளை பகுதியை சேர்ந்த ஆஸ்கிலின் மினி (29) என்ற 2 மாத கர்ப்பிணி பெண், நேற்று அதிகாலை 3.40 மணியளவில் திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். அவரை சுங்கான்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வெளிநாட்டில் வசிக்கும்...