தமிழ்நாடு தேர்தல் 2026: நாகர்கோவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

0
20

நாகர்கோவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நாகர்கோவில், தமிழக சட்டமன்றத்தின் 230வது தொகுதியாகும்.

நாகர்கோவில் மாநகராட்சி முழுமையாக இத்தொகுதியில் அடங்கும். வடிவீசுவரம், வடசேரி நீண்டகரை – ஏ, நீண்டகரை – பி, வேம்பனூர் ஆகிய வருவாய் கிராமங்கள் இத்தொகுதியின் கீழ் வரும். ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியும் இதில் அடங்கும் முக்கிய இடமாகும். 

இங்கு இந்து மற்றும் கிறிஸ்துவ நாடார் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். வேளாளர், மீனவர், இஸ்லாமிய மக்களும் கணிசமாக உள்ளனர். பட்டியலின மக்கள், பிராமணர்கள் உள்ளிட்ட இதர சமூகத்தினரும் நகரின் பல்வேறு வார்டுகளில் வசித்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் அதிக கல்வியறிவு மற்றும் நகர்ப்புற வாக்காளர்களை கொண்ட தொகுதி இதுவாகும். 

நாகர்கோவில் தொகுதி சட்டசபை தேர்தல் 2026 விவரங்கள்

2026ஆம் ஆண்டு தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற்று முடிந்த நிலையில், 2026 மே 4 ஆம் தேதி (இன்று) நாகர்கோவில் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாகர்கோவில்  வேட்பாளர்கள் பட்டியல் 2026

திமுக (DMK): ஆஸ்டின்

பாஜக (BJP): எம். ஆர். காந்தி (அதிமுக கூட்டணியில்) (தற்போதைய எம்எல்ஏ)

நாம் தமிழர் கட்சி (NTK): எம். முத்துக்குமார்

தமிழக வெற்றி கழகம் (TVK): ஜி. பெர்வின் கிங்ஸ்

நாகர்கோவில் தொகுதி  வாக்காளர் எண்ணிக்கை

ஆண் வாக்காளர்கள்: 1,26,738
பெண் வாக்காளர்கள்: 1,32,180
மூன்றாம் பாலினத்தவர்: 10
மொத்த வாக்காளர்கள்: 2,58,928

நாகர்கோவில் தொகுதி – 2026 வாக்கு சதவீதம்

2026 தேர்தலில் இத்தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம் சுமார் 74.66% ஆகும் (இது முந்தைய தேர்தலை விட 6% அதிகம்).

நாகர்கோவில் சட்டசபை தேர்தல் முடிவு 2021

வெற்றி: எம். ஆர். காந்தி (பாஜக) – 88,804 வாக்குகள்

இரண்டாம் இடம்: சுரேஷ் ராஜன் (திமுக) – 77,135 வாக்குகள்

நாம் தமிழர் கட்சி: விஜயராகவன் – 10,753 வாக்குகள்

நாகர்கோவில் தொகுதி  சட்டசபை தேர்தல் 2021 வாக்கு சதவீதம்

2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் 68.12% வாக்குகள் பதிவாகின.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here