மார்த்தாண்டம்: தார் போட்ட ஒரே நாளில் சாலை பழுது
மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் மார்த்தாண்டம் பம்மத்திலிருந்து திருவள்ளுவர் பஸ் டெப்போ பகுதிகளில் தார் போடப்பட்ட பகுதி ஒரே இரவில் பழுதடைந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று (மார்ச் 14) மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்கத் தலைவர்...
அதங்கோடு: மாயகிருஷ்ண சுவாமி கோயில் தங்க வாகனத்தில் ஊர்வலம்
அதங்கோடு ஆனந்தநகர் மாயகிருஷ்ண சுவாமி கோயில் 100-வது ஆண்டு ரோகிணி திருவிழா கடந்த 6-ம் தேதி தொடங்கியது. 9-ம் தேதியான நேற்று சிறப்பு பூஜைகள், கலச பூஜை, கலச அபிஷேகம் அதனைத் தொடர்ந்து, தங்க வாகனத்தில் மாயா கிருஷ்ணசாமியும், அலங்கார வாகனத்தில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி தேவியும், ஸ்ரீ...
இரணியல்: வீட்டில் செயின் பறிக்க முயன்றவருக்கு 6 வருடம் சிறை
குளச்சல் அருகே உள்ள மேற்கு கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் ஷியாம் மனைவி பரம ஜெசிலட் (59). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி மாலை வீட்டில் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்த கொள்ளையன்...
நாகர்கோவிலில் மத்திய அரசை கண்டித்து தி. மு. க. பொதுக்கூட்டம்
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயர் மகேஷ் தலைமை தாங்கி பேசினார். மாநகர தி.மு.க. செயலாளர்...
திருவட்டார்: பெண்ணுக்கு கொலை மிரட்டல்; ஒருவர் கைது
திருவட்டாறு அருகே புத்தன்கடை பகுதியை சேர்ந்தவர் ஜோபிஷா (32). இவரது கணவர் கிளிட்டஸ். அதே பகுதியை சேர்ந்தவர் ரெதீஷ் (40). இவர்கள் இரண்டு பேரும் உறவினர்கள் ஆவார்கள். சொத்து தகராறு தொடர்பாக ஏற்கனவே இரண்டு பேருக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 11)ரெதீஷ் ஜோபிஷாவின்...
தக்கலை: டியூஷன் ஆசிரியர் வீட்டில் மர்ம சாவு
தக்கலை அருகே உள்ள கல்குறிச்சி பகுதி பருத்தியறை தோட்டத்தை சேர்ந்தவர் மரிய ஜான்சன் (60). இவரது மனைவி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் வீட்டில் தனியாக வசித்து வந்த மரிய ஜான்சன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு டியூஷன் எடுத்து...
மார்த்தாண்டம்: பஸ்ஸில் மூதாட்டியிடம் நகைகள் திருட்டு
மார்த்தாண்டம் அருகே மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் மனைவி செல்வி (65). இவர் நேற்று (மார்ச் 11) குழித்துறையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி அரசு பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது செல்வி தனது கைப்பையில் தங்க நெக்லஸ், வளையல், கம்மல்கள், மோதிரங்கள் என மொத்தம் ஆறு பவுன்...
மேல்புறம்: பா. ஜ. க பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
மேல்புறம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்கக் கூட்டம் நேற்று (மார்ச்.12) மாலையில் மேல்புறம் சந்திப்பில் நடந்தது. இதில் மேல்புறம் தெற்கு ஒன்றிய தலைவர் சரவணவாஸ் நாராயணன் தலைமை வகித்தார்.
முன்னாள் ஒன்றிய தலைவர் சேகர், இடைக்கோடு பேரூராட்சி தலைவி உமாதேவி, வித்தியாதரன், சுகுமாரன்,...
குமாரபுரம்: சகோதரர்கள் மோதல்; போலீசார் வழக்கு
குமாரபுரம் அருகே வடக்குபாகம் பகுதியை சேர்ந்தவர் கணபதி (45). இவர் நாகர்கோவில் உள்ள அரசு ரப்பர் கழக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது தம்பி முருகன் (44). இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் குடும்ப சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில்...
கருங்கல்: காங்கிரஸ் பிரமுகர் உடலை அடக்க மனைவி எதிர்ப்பு
கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதி சேர்ந்தவர் காட்வின் நேசராஜ் (38). இவர் கிள்ளியூர் தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆவார். இவர் நோய்வாய்ப்பட்டு நேற்று முன்தினம் இறந்தார்.
இந்த நிலையில் அவரின் பெயரில் உள்ள சொத்துக்களை அவரது சகோதரர் தனது பெயரில் பத்திரம் எழுதி...













