ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெறுவதற்காக அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்திருந்தனர். நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்களைச் சந்தித்தார். அவரைக் கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதையடுத்து ரஜினிகாந்த் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனால் கை...
சென்னை உள்ளிட்ட 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகளின் எல்லை விரிவாக்கம்: 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம்
admin - 0
நகர்ப்புற வளர்ச்சி, உள்ளாட்சி தேர்தலைக் கருத்தில் கொண்டு சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம், கன்னியாகுமரி உள்ளிட்ட 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம் மற்றும் மறு சீரமைப்புக்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழக நகராட்சி நிர்வாகத் துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர்ப்புற மக்கள் தொகை 48.45 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது...
கடந்த ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் தானத்தால் 1,500 பேருக்கு மறுவாழ்வு
admin - 0
தமிழகத்தில் 2024-ம் ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு பொருத்தியதில் 1,500 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் என்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று கடந்த 2023 செப். 23-ம் தேதி முதல்வர் அறிவித்தார்....
பதவிக் காலம் முடியவுள்ள 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக அவசர சட்டத்துக்கான கோப்புகள் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
2019-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியின் போது சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அதனையும் சேர்த்து 9 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதனால்,...
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையங்கள் ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு மனநல மருத்துவமனை உள்ளிட்ட 7 அரசு போதை மறுவாழ்வு மையங்கள் உள்ளன. இந்நிலையில், சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 25 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் 20 படுக்கைகள் கொண்ட போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்...
பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு
admin - 0
பால் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை உற்பத்தியாளர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பால் வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் கடந்த 2019-20-ம் ஆண்டில் சுமார் 23 லட்சம் லிட்டராக ஆவின் பால் விற்பனை இருந்தது. தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கையின் காரணமாக, 2024-25-ல் சுமார் 7 லட்சம் லிட்டருக்கு மேல் அதிகரித்து தற்போது தினசரி 30 லட்சம்...
அரசின் பிரமாண பத்திரம், பதில் மனுக்களில் அரசு வழக்கறிஞர்களின் சான்றொப்பம் கட்டாயம்: தலைமை செயலர் உத்தரவு
admin - 0
நீதிமன்றங்களில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரம் மற்றும் பதில் மனுக்கள் உள்ளிட்ட பிற வழக்கு ஆவணங்களில் அரசு வழக்கறிஞர்களிடம் சான்றொப்பம் பெறுவது கட்டாயம் என அனைத்து ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அரசு தலைமைச் செயலர் என்.முருகானந்தம் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர்கள் உள்ளிட்டோருக்கு பிறப்பித்த சுற்றறிக்கை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு பிரமாணப் பத்திரம், பதில்...
கல்வி வளாகங்களில் வெளிநபர்கள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பிரவீன் தீட்சித் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் கடந்த கால செயல்பாடுகள் என்னென்ன, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து...
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை நாளை (ஜன.1) வெளியாகவுள்ள நிலையில் புதிய ரயில்கள், ரயில்களின் சேவை நீட்டிப்பு, வேகம் அதிகரிப்பு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
ரயில்வேயில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் விரைவு மற்றும் பயணிகள் ரயில்களுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்படும். இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான ரயில்வே புதிய காலஅட்டவணை சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு, 2025-ம் ஆண்டு ஜன.1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,...
தமிழக மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்த ஓயாது உழைப்போம்: இபிஎஸ் புத்தாண்டு வாழ்த்து
admin - 0
“தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்!” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக...










