சாலை விபத்தில் காயமடைபவர்களுக்கு இலவச சிகிச்சை: மத்திய அரசுக்கு நயினார் நாகேந்திரன், சரத்குமார் நன்றி
admin - 0
சாலை விபத்தில் காயமடைபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் எம்.பி. சரத்குமார் ஆகியோர் வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நயினார் நாகேந்திரன்: இந்தியாவில் ஓராண்டுக்கு சராசரியாக 1.8 லட்சத்துக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இந்நிலையில் சாலை விபத்து நிகழ்ந்த முதல் 7 நாட்களுக்குள் காயமடைந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை...
சிந்தாதிரிப்பேட்டை ஜோதியம்மாள் நகரில் ரூ.2.92 கோடியில் நவீன மீன் அங்காடி: துணை முதல்வர் திறந்து வைத்தார்
admin - 0
சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.2.92 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் அங்காடியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
சென்னையில் உள்ள மீன் அங்காடிகளில் சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி, முக்கியமானது. மீன் அங்காடிக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிந்தாதிரிப்பேட்டை, ஜோதியம்மாள் நகரில், சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ் ரூ.2.92 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி...
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதில், மொத்தம் 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வழக்கம்போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். அதன்படி மாணவிகள்: 96.70 %, மாணவர்கள்: 93.16 % தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.56% என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான...
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். இதில் பாடவாரியாக 100-க்கு 100 முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. கணினி அறிவியலில் அதிகமானோரும், விலங்கியலில் குறைவானோரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தமிழ்: 135இயற்பியல்: 1,125வேதியியல்: 3,181உயிரியல்: 827கணிதம்: 3.022தாவரவியல்: 269விலங்கியல்: 36கணினி அறிவியல்: 9,536வணிகவியல் 1,624கணக்குப் பதிவியல்: 1,240பொருளியல்: 556கணினிப் பயன்பாடு:...
மாமல்லபுரம் வன்னியர் இளைஞர் மாநாட்டில் அமைதி, கட்டுப்பாட்டுடன் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்: அன்புமணி அறிவுறுத்தல்
admin - 0
மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் தொண்டர்கள் அமைதி, கட்டுப்பாட்டுடன் பங்கேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. அனைவரும் வியக்கும் வண்ணம் இந்த விழாவை பிரம்மாண்டமாகவும், அதே நேரத்தில் அமைதி மற்றும் கட்டுப்பாட்டுடனும் நடத்த வேண்டியது அவசியம்....
ஜே.பி.நட்டா பயணித்த குண்டு துளைக்காத வாகனம் பழுதடைந்தது ஏன்? – டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்
admin - 0
தமிழகம் வந்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவின் குண்டு துளைக்காத வாகனம் திடீரென பழுதடைந்தது ஏன் என டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா மத்திய பாதுகாப்பு படையினருடன் கூடிய இசட் பிளஸ் (z+) பாதுகாப்பு பிரிவு உடையவர். அவர் 2-ம் தேதி சென்னைக்கு வருகிறார் என்ற தகவல் அறிந்ததும் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக...
‘இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்தால் இரு நாடுகளும் அழிந்துவிடும்’ என ஆதங்கத்துடன் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுகவின் 32-வது ஆண்டு தொடக்க விழா, பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக, வளாகத்தில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து வைகோ மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு, நீர் மோர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம்...
‘எவ்வளவு நெருக்கடி வந்தாலும் பாஜகவுடன் எந்த சூழலிலும் கைகோர்க்க மாட்டோம்’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விசிக வணிகர் அணியின் சார்பில் விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா, சென்னை கோயம்பேட்டில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: சாதியவாதிகளுடனும், மதவாதிகளுடனும் எந்தச் சூழலிலும் விசிக சமரசம் செய்துகொள்ளாது.
எத்தனை நெருக்கடிகள் தந்தாலும் அந்த நெருக்கடிகளை சமாளிக்கும் ஆற்றல் விசிகவுக்கு உண்டு....
சபரிமலையில் ஐயப்ப சுவாமியை தரிசிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையைத் தொடர்ந்து, வரும் 18, 19-ம் தேதிகளில் நிலக்கல் முதல் சந்நிதானம் வரை ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு ரப்பட உள்ளது. மேலும், அந்நாட்களில் பக்தர்களின் தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் தொடக்கத்தில் நடைதிறக்கப்பட்டு, வழிபாடு நடைபெறும். இதன்படி, இடவம் மாதத்துக்காக (வைகாசி) வரும் 14-ம் தேதி மாலை நடை திறக்கப்பட...
‘திமுகவை வீழ்த்த முடியாதா என தொடர் தோல்வியின் ஆற்றாமையில் எதிர்க்கட்சியினர் தவிக்கின்றனர். மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதிசெய்ய கடும் உழைப்பு தேவை’ என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என பதவியேற்பு உறுதிமொழி ஏற்று, இந்த மே மாதம் 7-ம் தேதியுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5-வது ஆண்டில் அடியெடுத்து...










