ஆந்திர மாநிலம், அனகாபல்லி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12.05 மணிக்கு திடீரென லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.
இந்த மாவட்டத்தில் ராம்பில்லி, எடமஞ்சிலி, கோட்ட ஊரட்லா ஆகிய பகுதிகளில் நில நடுக்கத்தை மக்கள் உணர்ந்தனர். ரிக்டர் அளவு 3.7 ஆக பதிவாகி உள்ளது. நில நடுக்கத்தை உணர்ந்ததும் பயந்து போய் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
நிலநடுக்கம் மீண்டும் ஏற்படும் என்ற பயத்தில்...
நாடாளுமன்ற மக்களவை தொகுதி எண்ணிக்கையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவது இது முதல் முறையல்ல. சுதந்திரத்துக்குப் பிறகு எம்.பி.க்களின் எண்ணிக்கை 5 முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1951 அக்டோபர் 25 முதல் 1952 பிப்ரவரி 21 வரை நடைபெற்றது. அப்போது 489 மக்களவை இடங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆரம்ப கால ஏற்பாடுகளின் அடிப்படையில் இந்த தொகுதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டது. அடுத்து 1957-ல் நடைபெற்ற 2-வது பொதுத்...
மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் கர்நாடகாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் நடித்து, ரூ.200 கோடி வரை மோசடி செய்துள்ளார். இவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பான அமலாக்கத் துறை வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் சர்மா முன் நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் அப்ரூவராக மாறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நடிகை ஜாக்குலின்...
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் அருணா சின்சோல்கர் (64). இவரை கடந்த ஆண்டு நவம்பரில் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட நபர்கள், தீவிரவாத தடுப்புப் படையிலிருந்து பேசுவதாக மிரட்டி அவரை டிஜிட்டல் கைது செய்தனர்.
பின்னர் மிரட்டி அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.26.65 லட்சத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். சம்பவம் நடந்து சில மாதங்களுக்கு பின்னர், தான் ஏமாற்றப்பட்டது அருணாவுக்குத் தெரியவந்தது. இதையடுத்து அவர் போபால் சைபர்...
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத், பிரதமர் நரேந்திர மோடியை விட் பெரிய பெண்ணியவாதி வேறொருவர் இருக்க முடியாது என்று பாராட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இது குறித்துப் பேசிய அவர், “இன்று, பாரதத்தின் மகள்கள் பிரதமர் மோடியை விடப் பெரிய பெண்ணியவாதி யாரும் இல்லை என்று நம்புகிறார்கள். பெண்ணியத்தின் ஒரே அடையாளமாக அவரே திகழ்கிறார். இந்த நாட்டின் மகள்கள் அவருக்கு என்றென்றும்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது, கலப்பட நெய் வாங்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு அறிவித்ததை தொடர்ந்து இந்த விவகாரம் பக்தர்களிடையே பேரதிர்வை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் திருப்பதி மற்றும் திருமலையில் ஆய்வு நடத்தி சிலரை கைதும் செய்தனர். இந்நிலையில் சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற 7ம் வகுப்பு சமூக அறிவியல்...
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று போனில் பேசினார். ஈரான் போர் நிலவரம் கவலை அளிப்பதாக தெரிவித்த தலைவர்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து நடைபெற வேண்டும் என வலியுறுத்தினர்.
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எரிபொருள் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது. ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில்...
நாட்டில் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கி 173-வது ஆண்டு நிறைவு: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
admin - 0
பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கி 173-வது ஆண்டு நிறைவு பெற்றுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதலாவது பயணிகள் ரயில் போக்குவரத்து 1853-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் போரி பந்தர் (மும்பை) மற்றும் தானே இடையே தொடங்கப்பட்டது. இந்த போக்குவரத்து தொடங்கப்பட்டு நேற்றுடன் 173-வது ஆண்டு நிறைவடைந்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தானே...
பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து பாகலூர், பானசவாடி உள்ளிட்ட 8 காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட இடங்களில் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் மொத்தமாக 5.91 கிலோ எம்டிஎம்ஏ, 21.82 கிலோ ஹைட்ரோ கஞ்சா, 1.51கிலோ கோக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது...
வங்காள புத்தாண்டு ‘பொய்லா பைசாக்’-ஐ முன்னிட்டு மேற்கு வங்க மக்களுக்கு பிரதமர் எழுதிய வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது: வங்காள புத்தாண்டை முன்னிட்டு மேற்கு வங்க மக்களுக்கு வாழ்த்துகள்.
கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் குழப்பமான ஊழல் ஆட்சி நடைபெறுகிறது. மக்கள் தங்களின் அடிப்படை உரிமை, கவுரவம் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்தை இழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் தற்போது நிலவும் சூழல் பெண்களின் பாதுகாப்பு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு,ஏழைகளின் உரிமைகள்...










