ஹரியானாவில் நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஹரியானா மாநிலம் ஷிகோப்பூரில் ஓம்காரேஷ்வர் பிராப்பர்டீஸ் என்ற நிறுவனத்திடமிருந்து கடந்த 2008-ல் ராபர்ட் வதேராவுக்குச் சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் 3.53 ஏக்கர் நிலத்தை வாங்கியது. இந்த நிலத்தை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக ராபர்ட் வதேரா உள்ளிட்ட 9 பேர் மீது அமலாக்கத்...
பிரேன் சிங், சாம்ராட் சவுத்ரி உட்பட பிற கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து முதல்வரான 9 பேர்!
admin - 0
பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்த பலரும் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளைப் பெற்றுள்ளனர். அந்தப் பட்டியலில் பிஹார் முதல்வராகப் பதவியேற்ற சாம்ராட் சவுத்ரியும் இணைந்துள்ளார்.
சாம்ராட் சவுத்ரி முதலில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியில் கடந்த 1990-ம் ஆண்டுகளில் அரசியலைத் தொடங்கினார். அப்போது முதல்வராக இருந்த ராப்ரி தேவியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். பின்னர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் 2014-ல்...
ஆந்திர மாநிலம் கும்மராவான்லபல்லியில் குவாரி தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இவர்கள் குவாரிக்கு தேவையான டெட்டனேட்டர், அமோனியம் சல்பேட், டீசல் போன்றவற்றை வைத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று வெடி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் அதே இடத்திலும் ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். காயம் அடைந்த 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டம், பரத்வாடா நகரை சேர்ந்தவர் முகமது அயாஸ் என்கிற தன்வீர் (19). இவர் மீது, பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆபாச வீடியோக்களை பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், “வாட்ஸ்-அப், ஸ்னாப்சாட் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் 180 சிறுமிகளை முகமது அயாஸ் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். பிறகு அவர்களை மும்பை மற்றும் புனேவுக்கு அழைத்துச் சென்று, ஆபாச வீடியோக்களை...
மும்பையில் உள்ள நெஸ்கோ மையத்தில் கடந்த 11-ம் தேதி இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரூ.2,000 நுழைவுக் கட்டணம் செலுத்தி சுமார் 4,000 பேர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்ட சிலர் தடை செய்யப்பட்ட எம்டிஎம்ஏ போதைப் பொருளை உட்கொண்டதாக கூறப்படுகிறது, இதனால் இரவு 12 மணியளவில், 3 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 24 வயது...
கோடை காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் வரும் மே 1ம் தேதி முதல் ஜூன் மாதம் 30ம் தேதி வரை தொடர்ந்து 2 மாதங்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் மற்றும் ஸ்லாட்டட் சர்வ தரிசனம் (எஸ்எஸ்டி) அதாவது சர்வ தரிசனத்திற்கு திருப்பதியில் டோக்கன் வழங்குதலை நிறுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதனால் முன்கூட்டியே சர்வ தரிசன டோக்கன்கள் வழங்காமல், நேரடியாக சர்வ...
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவருக்கு நினைவுப் பரிசாக முருகன் படத்தை சிபிஆர் வழங்கினார்.
இது குறித்து குடியரசு துணைத் தலைவர் சிபிஆர், ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் இன்று குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். அனைவருக்கும்...
சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் தொழிலாளர்கள் தங்களது வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள பெரிய பாய்லர் ஒன்று எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தைத் தொடர்ந்து ஆலை வளாகம் முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்ததால் தொழிலாளர்கள் உயிருக்குப் பயந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
முதற்கட்ட...
இந்திய கடற்படையின் அடுத்த தலைமுறை ஏவுகணை கப்பல் திட்டத்திற்காக, 18 அதிநவீன ‘கமேவா' வாட்டர்ஜெட் உந்துவிசை அமைப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை நார்வேயைச் சேர்ந்த கோங்ஸ்பெர்க் மேரிடைம் நிறுவனம் பெற்றுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய கடற்படைக்கு தேவையான வாட்டர்ஜெட் கருவிகளை வழங்க நார்வே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமான கப்பல்களில் காணப்படும் விசிறி போன்ற புரொப்பல்லர் அமைப்பிற்கு மாற்றாக, இந்த வாட்டர்ஜெட் தொழில்நுட்பம் நீரை உள்ளிழுத்து, அதிக வேகத்தில் வெளியேற்றுவதன்...
பிஹார் தலைநகர் பாட்னாவில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடக்கிறது. இதில் அந்த மாநிலத்தின் புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
பிஹாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்), இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பிஹார் முதல்வராக...










