மேகாலயாவில், ‘கேரோ ஹில்ஸ் தன்னாட்சி மாவட்டக் கவுன்சில்’ தேர்தல் ஏப்ரல் 10-ல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது. வேட்பு மனுவுடன் பழங்குடியினத்தவர் என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதை கேரோ பழங்குடியின அமைப்புகள் வரவேற்றன. ஆனால், பழங்குடியினர் அல்லாத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடுகின்றனர்.
இந்நிலையில், துரா பகுதியில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தை நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்....
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டியைச் சேர்ந்த 20 வயது இளைஞர், சமூக வலைதளம் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு மைனர் பெண் ஒருவருடன் பழகி உள்ளார். பின்னர் இருவரும் நேரில் சந்தித்து நெருக்கமாகப் பழகி உள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் தான் அந்தப் பெண்ணுக்கு 18 வயதாகி உள்ளது. இதையடுத்து தன்னுடைய மதத்துக்கு மாறி திருமணம் செய்து கொள்ளும்படி அந்தப் பெண்ணுக்கு இளைஞர் மிரட்டல் விடுத்து வந்துள்ளார். பயந்து...
திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக மனைவி புகார்: காதல் ஒன்றும் தவறு இல்லை என்கிறார் கேரள அமைச்சர்
admin - 0
திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக மனைவி புகார் கூறியதையடுத்து தனக்கு ஒன்றல்ல, 5 ஆயிரம் காதல் உறவு இருப்பதாக கேரள மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.பி. கணேஷ்குமார் கூறியுள்ளார்.
கேரள சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. கொல்லம் மாவட்டம் பதனப்புரம் தொகுதியில் இருந்து 5-வது முறையாக எம்எல்ஏவாக கணேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நடிகரும் கூட. 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்...
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போரின் தாக்கத்தால் நாடு முழுவதும் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், நிலைமையை சீராக்க அரசு மும்முரமாக பணியாற்றி வருகிறது என்றும் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “யாரும் பீதியடைய வேண்டாம். ஓட்டல்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது.
இந்த நிலைமையை...
உத்தர பிரதேசத்தில் உபெர், ஓலா போன்ற நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது. இது, முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் புதிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.
உ.பி. மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் உ.பி. மோட்டார் வாகன விதிகள் 1998-ல் திருத்தம் செய்யும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி உபெர், ஓலா போன்ற நிறுவனங்கள் மாநிலத்தில் நான்கு சக்கர வாகனங்களை இயக்குவதற்கு கட்டாய...
குஜராத் மாநிலம் சூரத் நகரில், பூஜைப் பொருட்களுடன் தவறுதலாகக் கால்வாயில் வீசப்பட்ட ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தை தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு மீட்டு கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
சூரத் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அண்மையில் தங்கள் இல்லத்தில் சிறப்புப் பூஜை நடத்தினர். பூஜை முடிந்தவுடன், வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட மலர்கள் மற்றும் இதரப் பொருட்களை ஒரு பையில் சேகரித்து பீரோவில் வைத்திருந்தனர். அதே பீரோவில்...
கர்நாடகாவில் பட்டியலின உள் ஒதுக்கீட்டுக்கு கடும் எதிர்ப்பு: 56,432 பணி இடங்களை நிரப்பும் அரசாணை நிறுத்திவைப்பு
admin - 0
கர்நாடகாவில் பட்டியலில் உள்ள 101 சாதியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க, எஸ்சி - ஏ (மாதிகா, அருந்ததியர் உள்ளிட்ட சாதிகள்), எஸ்சி - பி (ஹொலையா, ஆதிதிராவிடர் உள்ளிட்ட சாதிகள்), எஸ்சி - சி என 3 பிரிவுகளாக பிரித்துள்ளது.
அரசின் இந்த முடிவால் எஸ்சி- பி மற்றும் எஸ்சி- சி பிரிவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட சாதியினர் கல்வி, வேலை வாய்ப்பில் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அந்த...
உலகளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் இருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (சிப்ரி) ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் நிலவும் பதற்றமான சூழலே இந்தியா அதிக அளவில் ஆயுதங்களை வாங்கி குவிப்பதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. இது குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2016- 20 கால கட்டத்தை விட, 2021- 25 கால கட்டத்தில் இந்தியாவின்...
மேற்கு ஆசிய நிலவரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. மக்களவை நேற்று, நண்பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியது. இதையடுத்து மேற்காசிய நிலவரம் குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார்.
அப்போது இந்த விவகாரம் குறித்து முழு அளவில் விவாதம் நடத்த வேண்டும் என...
ஈரானின் 3 போர்க் கப்பல்களை இந்திய துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இந்தியாவில் கடற்படை கூட்டு பயிற்சியில் பங்கேற்றுவிட்டு ஈரான் திரும்பிய ஐஆர்ஐஎஸ் தேனா என்ற போர்க்கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் இந்தியப் பெருங்கடல் பகுதியில் தாக்கி அழித்தது. இதுகுறித்து இந்தியா மவுனம் காப்பது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இந்நிலையில் ஈரான் போருக்குப்பின் நடந்தது என்ன, இந்தியா எடுத்த...










