Google search engine
பெண்​களுக்கு மாத​வி​டாய் விடு​முறையை கட்​டாய​மாக்​கி​னால், பெண்​களை யாரும் வேலைக்கு தேர்வு செய்ய மாட்​டார்​கள் என கருத்து தெரி​வித்த உச்ச நீதி​மன்​றம், பொது நல மனுவை தள்​ளு​படி செய்​தது. பெண்களின் மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பது தொடர்பாக சைலேந்​திர மணி திரி​பாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்​கல் செய்தார். அந்த பொதுநல மனு​வில், மாத​வி​டா​யின் போது பெண்​கள் எதிர்​கொள்​ளும் பிரச்சி​னை​களை கருத்​தில் கொண்​டு, மாத​வி​டாய் விடுப்​புடன் கூடிய ஊதி​ய​மும், மாணவி​களுக்கு விடு​முறையும்...
தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரை பதவி நீக்​கம் செய்​யக் கோரும் தீர்​மானத்​துக்கான நோட்​டீஸை நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் எதிர்க்​கட்​சிகள் நேற்று சமர்ப்​பித்​தன. கடந்த ஆண்டு பிப்​ர​வரி 19-ம் தேதி தலை​மைத் தேர்​தல் ஆணை​ய​ராக ஞானேஷ் குமார் பதவி​யேற்​றார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி நடை​பெற்​றது. இதைத் தொடர்ந்து தமிழ்​நாடு, மேற்​கு​வங்​கம், குஜ​ராத், மத்​திய பிரதேசம், ராஜஸ்​தான் உள்​ளிட்ட 12 மாநிலங்​களில்...
பெங்​களூரு​வில் கடந்த ஜூலை மாதம் பிரபல ரவுடி சிவ பிர​காஷ் (40) கொலை செய்​யப்​பட்​டார். இதுதொடர்​பாக கிருஷ்ண​ராஜபுரம் பாஜக எம்​எல்ஏ பைரத்தி பசவ​ராஜை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், ஜாமீன் கோரி, அவர் சிறப்பு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். அவரது மனுவை விசா​ரித்த நீதிபதி சந்​தோஷ் கஜனன் பட், பைரத்தி பசவ​ராஜுக்கு ரூ.2 லட்​சம் பிணை​யத் தொகை​யுடன் நிபந்​தனை ஜாமீன் வழங்​கி​னார். வழக்கு தொடர்​புடைய​வர்​களை அச்​சுறுத்​தவோ, சாட்​சி​யங்​களை கலைக்​கவோ...
நடப்பு நிதியாண்டில் கூடுத லாக ரூ.2.81 லட்சம் கோடி செலவினத்துக்கு அனுமதி கோரி 2-ம் கட்ட துணை மானியக் கோரிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் பதில் அளித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: மேற்கு ஆசியாவில் தற்போது நிலவும் சூழல் காரணமாக ஏற்படும் சவால்களை சமாளிக்க, ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார நிலைத்தன்மை நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது துணை மானிய கோரிக்கை காரணமாக 2025-26 பட்ஜெட்...
ஒடிசாவில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் திங்கட்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது. பேரவையில் ஆளும் பாஜக 2 இடங்களிலும் எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் ஓரிடத்திலும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. நான்காவது இடத்துக்கு பாஜக ஆதரவுடன் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் திலீப் ரே மற்றும் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் தத்தேஸ்வர் ஹோட்டா இடையே போட்டி நிலவுகிறது. 14 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி பிஜு...
டெல்லி அருகே காஜி​யா​பாத் பகு​தியை சேர்ந்​தவர் ஹரிஷ் ராணா. சண்​டீகரில் உள்ள பஞ்​சாப் பல்​கலைக் ​கழகத்​தில் பி.டெக் படித்து வந்​தார். இவர் தங்​கி​யிருந்த விடு​தி​யின் 4-வது மாடியி​லிருந்து கடந்த 2013, ஆகஸ்ட் 20ம் தேதி தவறி விழுந்​தார். இதில் அவருக்கு நரம்​பிழைத் தண்​டில் காயம் ஏற்​பட்​டது. சிகிச்​சைக்​குப் பிறகும் நினைவு திரும்பாத நிலை​யில், மருத்​துவ ரீதி​யில் உணவும், நீரூட்டமும் அளித்​தும் தொண்​டை​யில் சுவாச குழாய் பொருத்தியும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்​தது. படுத்த...
 மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு கடந்த ஆண்டு டிசம்பரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தேர்தல் ஆணையத்தால் மேற்கு வங்கத்தில் தொடங்கப்பட்டன. இந்நிலையில் இந்த எஸ்ஐஆர் பணியில் முறைகேடுகள் நடை பெற்றுள்ளதாகவும், இதற்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்தான் காரணம் என்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகார் கூறி வருகிறது. இதைத் தொடர்ந்து அவரை...
சத்​தீஸ்​கர் மாநிலம் பஸ்​தார் பிராந்​தி​யத்​தில் 108 மாவோ​யிஸ்ட்​கள் பாது​காப்​புப் படை​யினரிடம் நேற்று சரணடைந்​தனர். இவர்​களின் தலைக்கு அரசு ரூ.3.95 கோடி வெகுமதி அறிவிக்​கப்​பட்​டிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது. மத்​திய உள்​துறை அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள தகவலின்​படி, சரணடைந்​தவர்​களில் 8 பேர் மாவோ​யிஸ்ட்​களின் முக்​கியக் குழு உறுப்​பினர்​கள் ஆவர். மார்ச் 31-ம் தேதிக்​குள் இந்​தி​யா​வில் மாவோ​யிஸத்தை முற்​றி​லும் ஒழிப்​ப​தாக மத்​திய அரசு இலக்கு நிர்​ண​யித்​துள்​ளது. இந்​நிலை​யில், பிஜப்​பூர் மாவட்​டத்​திலிருந்து 37 பேரும், தந்தே​வா​டா​வில் இருந்து 30...
நா​டாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத்​தொடரில், மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா​விற்கு எதி​ராக எதிர்க்​கட்​சிகள் கொண்டு வந்த நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் தோல்​வியடைந்​த​து. மக்​களவை​யில் கடும் அமளி மற்​றும் முழக்​கங்​களுக்கு இடையே, அவையை நடத்​திக் கொண்​டிருந்த ஜெக​தாம்​பிகா பால், சபா​நாயகரை நீக்​கக் கோரும் தீர்​மானம் தோல்​வியடைந்​ததை அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தார். முன்​ன​தாக, மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவின் உரைக்கு எதிர்ப்பு தெரி​வித்து எதிர்க்கட்சி உறுப்​பினர்​கள் முழக்​கமிட்​டனர். தீர்​மானத்​தின் மீது வாக்​கெடுப்பு நடத்த ஒத்​துழைக்​கு​மாறும், உறுப்​பினர்​கள் தங்​களது...
 5 மாநில சட்​டப் பேரவை தேர்​தலுக்​கான தேதி இன்று வெளி​யாக வாய்ப்பு இருப்​ப​தாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்​நாடு, மேற்கு வங்​கம், அசாம், புதுச்​சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்​களுக்கு தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் தலை​மையி​லான தேர்​தல் ஆணை​யர்​கள் சென்று தேர்​தல் பணி​கள் தொடர்​பாக ஆலோ​சனை நடத்​தி​விட்​டு கடந்த 10ம் தேதி திரும்​பி​யுள்​ளனர். வழக்​க​மாக ஆய்வு முடிந்த ஓரிரு நாட்​களில் தேர்​தல் தேதி அறிவிப்பு வெளி​யாகும். எனவே, 5 மாநில...