அவதூறு வழக்கில் சமூக சேவகர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை: டெல்லி ஆளுநருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
admin - 0
மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நர்மதா பள்ளத்தாக்கு மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட `நர்மதா பச்சாவ் அந்தோலன்’ அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க மக்களை தவறாக வழிநடத்தியதாக சமூக சேவகர் மேதா பட்கர் மீது புகார் எழுந்தது.
மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மேதா பட்கர், வி.கே.சக்சேனாவுக்கு எதிராக பேசினார். இதையடுத்து, மேதா பட்கருக்கு எதிராக வி.கே. சக்சேனா அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
2001-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் அப்போது காதி...
பிஹார் மாநிலம் பாட்னா தீ விபத்தில் தனது தாய் இறந்ததாக கூறி அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் ரூ.83 லட்சம் காப்பீட்டு தொகை பெற முயன்றது அம்பல மாகியுள்ளது.
பிஹார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த ஏப்ரல் 25-ல் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச் சடங்கு களும் முடிந்தன.
இந்நிலையில் இந்த ஓட்டல்...
மேற்கு வங்கத்தில் பெண்ணை தாக்கும் வீடியோ வைரல்: பாஜக, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கண்டனம்
admin - 0
மேற்கு வங்கத்தில் பொதுமக்கள் முன்னிலை யில் ஒரு பெண்ணை ஒருவர் சரமாரியாக தாக்குவது போன்ற வீடியோ வேகமாக பகிரப் பட்டு வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் சமூக வலைதளங் களில் ஒரு வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், பொது இடத்தில் ஒரு பெண்ணை ஒரு ஆண் மூங்கில் கம்பால் சரமாரியாக தாக்குகிறார். இதில் அந்தப் பெண் நிலைகுலைந்துவிட்டார். அந்த இடத்தில் இருக்கும் பொதுமக்கள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த உதவியும்...
ஆம் ஆத்மி கட்சியின் மதுபான ஊழலால்தான் மக்களவைத் தேர்தலின் போது டெல்லியில் எங்கள் கட்சி தோல்வி அடைந்தது என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் தத் நேற்று கூறியதாவது: டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக நாங்கள் புகார் செய்தபோது, இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 18 மாதங்கள் வரை...
தாமதமானாலும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸை நாசா பூமிக்கு அழைத்து வரும்: இஸ்ரோ தலைவர் கருத்து
admin - 0
சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப, கேப்சூல் வகை விண்கலம் தயாரிக்கும் பொறுப்பை போயிங்நிறுவனத்திடம் அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா வழங்கியது.
இதன் வடிவமைப்பாளர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ். இவர்சர்வதேச விண்வெளி மையத்துக்கு பல முறை சென்று திரும்பிய அனுபவம் மிக்கவர். போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் விண்கலம் பரிசோதனை முயற்சியாக, கடந்த மாதம் 5-ம் தேதி, அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து அட்லஸ்-5 ராக்கெட்...
ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தஇருவர் தரைப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய ராணுவ வரலாற்றில், ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் தளபதிகளாக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி இந்திய தரைப் படைத் தளபதியாகவும், அட்மிரல் தினேஷ் திரிபாதி இந்திய கடற்படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உபேந்திர திவேதியும், தினேஷ் திரிபாதியும் 1970-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள ரிவா சைனிக் பள்ளியில் 5-வது வகுப்பு முதல் ஒன்றாக...
புதிய குற்றவியல் சட்டம் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்த நிலையில் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது இந்தச் சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023...
கேரளாவில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அந்தமாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டு உள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த மாநிலத்தில் வைரஸ் காய்ச்சல், டெங்கு, பறவைக் காய்ச்சல் ஆகியவை அதிகமாக பரவி வருகின்றன.
இதுதொடர்பாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணாஜார்ஜ் தலைமையில் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கேரள சுகாதாரத் துறை...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசியது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. கடந்த முறை தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில், இந்த முறை கூட்டணியின் பலத்தில் பாஜக ஆட்சியமைத்திருக்கிறது. இதற்கான காரணத்தைக் கண்டறிந்து, கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் கட்சியின்பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனைகளும்...
21-60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை: மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் முதல் அமல்
admin - 0
21 முதல் 60 வயதுகுட்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிர சட்டப் பேரவையில் துணை முதல்வரும், நிதியமைச்சர் பொறுப்பை வகிப்பவருமான அஜித் பவார் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல்செய்தார். அப்போது பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் பல்வேறு இலவச திட்டங்களை அவர் அறிவித்தார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து துணை...










