மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமிகள் இருவரை, அங்கு பணியாற்றும் துப்புரவு தொழிலாளி அக் ஷய் ஷிண்டே என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவத்தை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயன்றது. பெற்றோர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்திய பின் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்தனர்....
உத்தர பிரதேச மாநிலம் ஜாபர்பூர் கிராமத்தில் கடந்த 12-ம் தேதி இரு கோஷ்டிகளுக்கு இடையில் மோதல் ஏற்படுத்தப்பட்டது. அப்போது இருதரப்பும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் பொதுமக்கள் 8 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட உத்தராகண்ட் மாநிலம் ருத்ராபூரைச் சேர்ந்த ஜஸ்வீர் சிங், தினேஷ்பூரை சேர்ந்த மன்மோகன் சிங், உ.பி. மாநில ராம்பூரை சேர்ந்த சாஹப் சிங் ஆகிய 3 பேர் தலைமறைவாயினர்.
இந்நிலையில் மேற்கூறிய 3 முக்கிய...
உயிர் சக்தி வேளாண்மை மூலம் மண்ணின் ஆரோக்கியம், விளைச்சலை மேம்படுத்தலாம்: வேளாண் நிபுணர் சுல்தான் இஸ்மாயில் கருத்து
admin - 0
உயிர் சக்தி வேளாண்மை முறையின் மூலம் மண்ணின் ஆரோக்கியம், பயிர் விளைச்சலின் அளவை மேம்படுத்த முடியும் என பெங்களூருவில் நடந்த மாநாட்டில் வேளாண் நிபுணர் சுல்தான் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்திய உயிர் சக்தி வேளாண் கூட்டமைப்பின் 2 நாள் தேசிய மாநாடு பெங்களூருவில் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்திய உயிர் சக்தி வேளாண் கூட்டமைப்பின் (Biodyanamic association of India) தலைவர் கே.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில்...
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சிவசேனா கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
உத்தவ் தாக்கரேவிடம் இருந்து பிரிந்து முதல்வர் ஷிண்டேவுடன் இணைந்த 40 எம்எல்ஏ.க்களும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சிவசேனா 45 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்டது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது சொந்த தொகுதியான தானேவில் உள்ள கோப்ரி பச்பகாடி தொகுதியில் போட்டியிடுகிறார். சிவசேனா கட்சியில் தற்போதைய எம்எல்ஏ.க்களில்...
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன.
முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம், காங்கிரஸ், ஆர்ஜேடி, சிபிஐ (எம்எல்) ஆகிய இண்டியா கூட்டணி கட்சிகள் இத்தேர்தலை இணைந்து சந்திக்கின்றன. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 70 இடங்களில் ஜேஎம்எம், காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் போட்டியிட முடிவு...
உத்தர பிரதேச மாநிலம் புலந்த் சாஹரில் உள்ள சிக்கந்தராபாத் பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில் திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில், 9 மாத கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஷாபுரி காலனியைச் சேர்ந்தவர் முகமது ரியாசுதீன் (50). இவரது மனைவி ருக்சானாவுக்கு (45) உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆக்சிஜன்...
டெல்லியில் காற்று மாசுபாட்டுக்கு அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவது முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில் காற்று தர மேலாண்மை ஆணையத்தின் (சிஏகியூஎம்) உத்தரவுகள், குறிப்பாக தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் கடைபிடிக்கப்படவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல், பஞ்சாப், ஹரியானா மாநில அரசுகளின் தலைமைச் செயலர்கள் நீதிமன்றத்தில் ஆஜராயினர்....
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கேரள தேவஸ்வம் அமைச்சர் வி.என்.வாசவன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: பட்டாசு வெடிப்பதில் மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகள் பகுத்தறிவற்ற செயல் மட்டுமின்றி தேவையற்றதுமாகும். மாநிலங்களில் பட்டாசு வெடிப்பது என்பது சடங்குகளின் ஒரு பகுதி. மதப் பண்டிகைகளின்போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்க அது முக்கியத்துவம் வாய்ந்தது. திருச்சூர் பூரம் விழாவில் மணிக்கணக்கில் நீடிக்கும் வானவேடிக்கை காட்சிகள் பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக...
இந்தியாவின் அரிய வகை பறவை இனங்களில் ஒன்று கான மயில். தற்போது இந்தியாவில் மொத்தம் 150 கான மயில்களே உள்ளன.
இந்நிலையில், கான மயிலை பாதுகாக்கும் நோக்கிலும், அதன் இனத்தைப் பெருக்கும் நோக்கிலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2016-ம் ஆண்டு கான மயில் மீட்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள பாலை வன தேசிய பூங்காவில் கானமயில் இனப்பெருக்க மையம் அமைக்கப்பட்டது. கான மயில்களில்...
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் இதுவரை இல்லாத அளவில் தம்குடும்பத்தினரையும் வாரிசுகளையும் களமிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இங்கு முக்கிய போட்டியிலுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மற்றும் இண்டியா கூட்டணிகள் வெளியிடும் வேட்பாளர் பட்டியலில் அரசியல் கட்சி தலைவர்களின் வாரிசுகளும், குடும்பத்தினரும் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்று வருகின்றனர். இதில் முக்கியமாக வாரிசுஅரசியலை...









