நகைச்சுவை நிகழ்ச்சியை பார்த்து தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தவர் மயங்கி விழுந்தார்: மருத்துவர் விளக்கம்
admin - 0
தொலைக்காட்சி ஒன்றில் நகைச்சுவை நிகழ்ச்சியை ரசித்து பார்த்துக்கொண்டிருந்த 53 வயது நபர் ஒருவர் சிரிப்பை அடக்க முடியாமல் திடீரென மயங்கி கீழே விழுந்த சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
‘வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்’ என்றும், 'மனதார சிரிப்பவர்களின் ஆயுள் நீடிக்கும்' என்றும் பலர் சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால், ஹைதராபாத்தை சேர்ந்த ஷியாம் (53) என்பவர், தொலைக்காட்சி ஒன்றில் நகைச்சுவை நிகழ்ச்சியை பார்த்து விழுந்து, விழுந்து சிரித்துள்ளார். அப்போது சிரிப்பை...
எனக்குள் ஒரு பற்றற்ற உணர்வு வளர்ந்தது. என் மனம் புற உலகிலிருந்து முற்றிலும் விலகியது. இத்தகைய பெரிய பொறுப்புகளுக்கு மத்தியில் தியானம் சவாலானதாக மாறுகிறது, ஆனால் கன்னியாகுமரி மண் மற்றும் சுவாமி விவேகானந்தரின் உத்வேகம் அதை சிரமமற்றதாக ஆக்கியது. கன்னியாகுமரியில் இதே இடத்தில் சுவாமி விவேகானந்தர் தியானம் செய்தபோது என்ன அனுபவித்திருப்பார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
இந்தப் பற்றற்ற நிலைக்கு மத்தியில், அமைதிமற்றும் மவுனத்தின் மத்தியில், என் மனம் பாரதத்தின்...
ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ்குமார் மீனா நேற்று அமராவதியில் கூறியதாவது:
ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் முன் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணி முதல் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் வெளியாவதை முன்னிட்டு ஆந்திராவில் 25 கம்பெனி துணை ராணுவப் படையினர்...
போலி ஊடகவியலாளர்களின் அரசியல் விவாதங்களில் நேரத்தை வீணடிக்காதீர்கள்: பிரசாந்த் கிஷோர் கருத்து
admin - 0
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்றுமுன்தினம் வெளியாகின. பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் கூட்டணி 130 – 160 இடங்கள் வரையில் வெல்லும் என்றும் பல்வேறு ஊடகங்கள் கணிப்பு வெளியிட்டுள்ளன.
பிரபல தேர்தல் வியூகரான பிரசாந்த் கிஷோர், இந்த முறைபாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் 2019 தேர்தல் பெற்ற இடங்களை பெறும் அல்லது அதைவிட கூடுதல்இடங்களில் பாஜக வெல்லும் என்று தெரிவித்து...
வட மாநிலங்களில் வெப்ப அலை: உ.பி.யில் 33 தேர்தல் பணியாளர்கள் உயிரிழப்பு – ரூ.15 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
admin - 0
உத்தர பிரதேசத்தில் 13 தொகுதிகளுக்கு ஏழாம் கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 33 பேர் அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் உயிரிழந்தனர். இதில், ஊர்க் காவல் படையினர், துப்புரவு பணியாளர்களும் அடங்குவர் என்று அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா தெரிவித்துள்ளார்.
வாக்காளர் உயிரிழப்பு: பலியா மக்களவை தொகுதியின் சிக்கந்தர்பூர் பகுதியில் உள்ளஒரு வாக்குச்சாவடியில் ஓட்டளிப்பதற்காக வரிசையில் நின்ற...
‘‘தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தவறு என நிருபணம் ஆகும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், நான் மொட்டை அடிப்பேன்’’ என ஆம் ஆத்மி கட்சியின் புது டெல்லி வேட்பாளர் சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் எல்லாம் தவறு என நிருபணமாகும். 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட பின்பு இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும்....
“மக்களவை தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்புகளுக்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கும். பொறுத்திருந்து பாருங்கள்” என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி திருச்சி சிவா, கம்யூனிஸ்ட்...
மே.வங்கத்தில் 2 பூத்களில் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு
admin - 0
மக்களவைத் தேர்தலில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மேற்குவங்கத்தின் பராசத், மதுராபூர் தொகுதிகளுக்கு உட்பட்ட தலா ஒரு வாக்குச்சாவடியில் இன்று (ஜூன் 3) காலை தொடங்கி மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டு வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகியதேதிகளில் 7 கட்டமாக 543 தொகுதிகளில்...
மும்பை ஓட்டல் அதிபர் கொலை வழக்கில் பிரபல தாதா சோட்டா ராஜனுக்கு ஆயுள் சிறை: மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
admin - 0
மும்பை ஓட்டல் அதிபர் ஜெயா ஷெட்டி கொலை வழக்கில் பிரபல தாதா சோட்டா ராஜனுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்தது.
மும்பை திலக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி. சிறு வயதில் சினிமா தியேட்டர்களில் டிக்கெட்டை பிளாக்கில் விற்று வந்த இவர் போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் சிறை சென்றார். சிறை தண்டனைக்குப் பின் இவர் படா ராஜன் தாதா கும்பலில் இணைந்தார். படா...
கனடா கல்லூரியில் சீட்டு வாங்கித் தருவதாக இந்திய மாணவர்களை ஏமாற்றிய முகவருக்கு 3 ஆண்டுகள் சிறை
admin - 0
கனடா நாட்டில் உயர்கல்வி படிக்க போலி அனுமதிச் சீட்டு விநியோகித்து இந்திய மாணவர்களை ஏமாற்றி வந்த இந்திய முகவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து கனடா நீதிமன்றம் உத்தரவிட்டது.
ப்ரிஜேஷ் மிஸ்ரா (37) என்பவர் தன்னை குடியேற்றப்பிரிவு முகவர் என கூறிக்கொண்டு பஞ்சாப் மாநிலத்தில் அலுவலகம் நடத்தி வந்தார். கனடா நாட்டின் முன்னணி கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் படிக்கும் கனவோடுஇருக்கக்கூடிய எளிய குடும்பப்பின்னணி கொண்ட மாணவர்கள்தான் இவரது இலக்கு. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டுகனடா...










