வாக்கு எண்ணிக்கை: ஆந்திராவில் 144 தடை உத்தரவு

0
53

ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ்குமார் மீனா நேற்று அமராவதியில் கூறியதாவது:

ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் முன் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணி முதல் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் வெளியாவதை முன்னிட்டு ஆந்திராவில் 25 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அமலாபுரம் மக்களவை தொகுதிக்கான முடிவு வெளியாக அதிகபட்சம் 9 மணி நேரம் ஆகலாம். இதற்காக 27 சுற்றுகள் எண்ணப்பட உள்ளன. இவ்வாறு தேர்தல் அதிகாரி முகேஷ்குமார் மீனா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here