Google search engine
உத்தர பிரதேசம் டுமரியாகன்ஜ் தொகுதியில் 6-ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜகதாம்பிகா பால்-ஐ ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் நேற்று பிரச்சாரம் செய்தார். சித்தார்த்நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: முதல் ஐந்து கட்ட தேர்தல்களில் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற வாய்ப்பில்லை. காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்கள் கூட கிடைக்காது. அகிலேஷ் யாதவுக்கு 4 இடங்கள் கூட கிடைக்காது....
வாக்கு இயந்திரத்தை உடைத்த ஜெகன் கட்சியை சேர்ந்த மாசர்லா சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆந்திரதலைமை தேர்தல் அதிகாரி முகேஷ்குமார் மீனா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், மாசர்லா சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 13-ம் தேதிவாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்கட்சியின் வேட்பாளர் ராமகிருஷ்ணா தனது ஆதரவாளர்களுடன் பாலய்யா கேட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு சென்றார். "இந்த வாக்குச்சாவடியில்...
அமேதியின் பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இரானி, அங்கு 1981-ல் நடைபெற்ற தேர்தல் வன்முறையை நினைவு கூர்ந்துள்ளார். அப்போது ராஜீவ் காந்திக்கு எதிராக சுயேட்சையாகப் போட்டியிட்ட மேனகா காந்தியை தாக்கியதுடன், அவரது உடைகளை கிழிக்கவும் காங்கிரஸார் முயற்சித்ததாகக் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் அமேதியில் ஐந்தாம் கட்டமாக தேர்தல் மே 20-ம் தேதி நடைபெறுகிறது. இங்கு பாஜக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. தனது தீவிரத் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையே...
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள அமலாக்கத் துறை, அதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பெயரையும், ஆம் ஆத்மி கட்சியையும் சேர்த்துள்ளது. டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ,...
தீவிரவாதத்தை நீண்ட காலமாக கடைபிடித்து வந்தவர்களை, அது அழிக்கத் தொடங்கியுள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய தொழிற்கூட்டமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "ஒப்பந்தங்கள் அவமதிக்கப்பட்டதாலும், சட்டத்தின் ஆட்சி புறக்கணிக்கப்பட்டதாலும் நிலத்திலும் கடலிலும் புதிய பதற்றங்களை ஆசியா காண்கிறது. இந்தச் சூழலில், தீவிரவாதத்தை நீண்ட காலமாக கடைபிடித்து வந்தவர்களை, அது அழிக்கத் தொடங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக் எல்லையில் சீனாவின் ராணுவம் தொடர்ந்து நிலைகொண்டுள்ள...
டெல்லி முதல்வரின் உதவியாளரால் ஆம் ஆத்மி கட்சி பெண் எம்.பி. ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் புதிய வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, ஸ்வாதி மலிவால் அளித்த புகாரின் அடிப்படையில், டெல்லி முதல்வரின் இல்லத்தில் டெல்லி போலீஸாரும், தடயவியல் துறையும் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியுமான ஸ்வாதி மலிவால், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் அவரது உதவியாளரால்...
பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ‘புல்டோசர்’ தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இண்டியா கூட்டணியினர் புல்டோசரை எங்கு இயக்க வேண்டும் என்பதை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர்...
காங்கிரஸ் சார்பில் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ப.சிதம்பரம் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு 3 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இறுதிக்கட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில் பல்வேறு வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு டெல்லியில் மீண்டும் கூடி கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் தந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வார...
பிரதமராக மோடியின் செயல்பாடு தொடர்பான ஆய்வை இப்சாஸ் நிறுவனம் மேற்கொண்டது. கடந்த பிப்ரவரி மாதம் அந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, 75 சதவீதம் பேர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 65 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். பிரதமர் மோடிக்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 2022-ம் ஆண்டு டிசம்பரில் மோடியின் செயல்பாடு மீதான ஆதரவு 60 சதவீதமாகவும், 2023 பிப்ரவரியில்...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “மேற்கு வங்கத்தில் அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களின் மாத ஊதியம் ரூ.8,250-ல் இருந்து ரூ.9,000 ஆக அதாவது ரூ.750 உயர்த்தப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணியாளர்களின் ஊதியம் மாதம் ரூ.500 உயர்த்தப்படும். இதுவரை மாதம் ரூ.6,000 பெற்று வந்த இவர்கள், இனி ரூ.6,500 பெறுவார்கள். அங்கன்வாடி மற்றும் ஆஷா ஊழியர்களின் பணி பெருமை அளிப்பதாக உள்ளது’’ என்று...