மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு தேர்தல்: 9 வேட்பாளர்களின் பெயரை அறிவித்தது பாஜக
admin - 0
மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு செப்டம்பர்3-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்களை பாஜக அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருக்க வேண்டியது மிக முக்கியம். மாநிலங்களவையில் தற்போது உறுப்பினர்களின் மொத்தஎண்ணிக்கை 229-ஆக உள்ளது.இதில் பாஜகவுக்கு 87 எம்.பி.க்கள் உள்ளனர். தே.ஜ. கூட்டணி கட்சியினரை சேர்த்தால் இந்த எண்ணிக்கை 105 ஆகவும், 6 நியமனஎம்.பி.க்களின் ஆதரவை சேர்த்தால்தே.ஜ.கூட்டணியின் பலம்...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-வது 700 மெகாவாட் அணு உலை நேற்று முழு திறனுடன் உற்பத்தியை தொடங்கியது. இதுகுறித்து இந்திய அணு மின் சக்தி கழகம் (என்பிசிஎல்) வெளியிட்ட அறிக்கையில், “குஜராத் மாநிலத்தில் உள்ள கக்ரபார் அணு மின் நிலையத்தில் (கேஏபிஎஸ்) நிறுவப்பட்டுள்ள 4-வது அணு உலை முழு திறனுடன் உற்பத்தியை தொடங்கி உள்ளது. இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-வது 700 மெகா வாட்அணு உலை ஆகும். முதல் 700...
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. ஜெகன், ஆந்திர முதல்வராக இருந்தபோது, அரசுப் பணிகள் காரணமாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரினார். இதனை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. எனினும்...
சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தாலும் நேரடி நியமன முறை (லேட்டரல் என்ட்ரி) என்பது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
மத்திய அரசு, கடந்த 18-ம் தேதி,10 இணை செயலாளர்கள் மற்றும்35 இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் என 45 பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நேரடி நியமன முறை (லேட்டரில் என்ட்ரி)மூலமாக பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அந்த முடிவை...
மணிப்பூரின் காங்போக்பி மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களின் நாகா பழங்குடி கிராமங்களை நோனி மாவட்டத்துடன் இணைப்பதில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து மணிப்பூர் ரோங்மேய் நாகா கவுன்சில் 18-ம் தேதி போராட்டம் அறிவித்தது.
70 சிறுபான்மை நாகா பழங்குடியினர் வசித்து வரும் காங்போக்பி மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக நாகா மாவட்டத்துடன் சேர்க்கமாநில அரசு தவறியதால் காலவரையற்ற முழு அடைப்பு கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்தால் மணிப்பூரில் போக்குவரத்து...
தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மாநிலத் தலைநகரான ஹைதராபாத்திலும் தொடர் மழை பெய்வதால், பொதுமக்கள், குறிப்பாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
முஷீராபாத் பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால், சாலையில் நடந்து சென்ற ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரது சடலம்நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள் ளது. இவர் யார்? என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.இதேபோன்று மற்றொருவர், ஸ்கூட்டரில் சென்று கொண்டி...
இயந்திரம் மூலம் தயாரிக்கப்படும் பாலியஸ்டர் தேசியக் கொடி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இந்து நாளிதழுக்கு எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது:
காதி துணியினால் செய்யப்பட்ட தேசியக் கொடி தேசிய பெருமையின் உருவகமாக உள்ளது. தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவதில் பிரதமர் மோடி இரட்டை நிலைப்பாட்டை கடைபிடித்து வருகிறார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருளுடன் இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட...
மும்பையில் 4 வயது சிறுமிகள் 2 பேருக்கு பாலியல் வன்கொடுமை: மக்கள் போராட்டத்தால் ரயில் சேவை பாதிப்பு
admin - 0
மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அருகே 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பத்லாப்பூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் படித்து வந்த நான்கு வயதே நிரம்பிய 2 சிறுமிகளை பள்ளியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த தகவலை அறிந்த பொதுமக்கள், நேற்று பத்லாப்பூர் ரயில் நிலையத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பலர் ரயில் தண்டவாளத்தில் இறங்கி ரயிலை மறித்துப்...
வயநாடு நிலச்சரிவு, கனமழையால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய தேக்கடி: வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வர்த்தகர்கள் வேதனை
admin - 0
வயநாடு நிலச்சரிவு, தொடர் கனமழையால் தேக்கடிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் வார நாட்களில் இங்குள்ள பல சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடிக் காணப் படுகின்றன.
தேனி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையான குமுளி அருகே தேக்கடி அமைந்துள்ளது. பெரியாறு புலிகள் வனச்சரணாலய பகுதியான இங்கு படகு சவாரி, பசுமை நடை, பழங்குடியினர் கலைநிகழ்ச்சி, மலையேற்றம், வியூ பாய்ன்ட் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலாப் பகுதிகள் உள்ளன. இதனால் உள்...
ரஷ்யாவுடனான போர் தொடங்கிய பின்னர் உக்ரைன் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக செல்லவுள்ளார். இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார்.
மூன்றாவது முறையாக பாஜகதலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைந்த பின்னர் பிரதமர் மோடி, 2 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த மாதம் ரஷ்யா சென்றார். 3-வது முறையாக பிரதமர் பொறுப்பேற்ற பின்னர் அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் அந்தப் பயணம் சர்வதேச...










