தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மாநிலத் தலைநகரான ஹைதராபாத்திலும் தொடர் மழை பெய்வதால், பொதுமக்கள், குறிப்பாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
முஷீராபாத் பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால், சாலையில் நடந்து சென்ற ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரது சடலம்நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள் ளது. இவர் யார்? என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.இதேபோன்று மற்றொருவர், ஸ்கூட்டரில் சென்று கொண்டி ருக்கும் போதே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரைஅங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று காப்பாற்றினர். ஹைதராபாத்தில் ஓடும் மூசி நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.