பஞ்சாபில் இன்று ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், வேளாண் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், வழக்குகள் வாபஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாபில் இன்று (டிச. 18) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகளின் தலைவர்...
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் பங்கேற்க நேற்று காங்கிரஸ் பொதுச் செயலரும், எம்.பி.யுமான பிரியங்கா காந்தி வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய கைப்பையுடன் வந்தார். பிரியங்கா காந்தி, காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் போராட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். பாலஸ்தீனத்துக்கு ஆதரவுக்கு தெரிவிக்கும் வகையில் அவர் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இதனிடையே, நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியின் பேச்சும் நடவடிக்கைகளும் பெரும் கவனம் பெற்று வருகின்றன. மக்களவை...
முதியவரைக் காக்க வைத்ததால் ஊழியர்களுக்கு நொய்டா ஆணைய தலைமைச் செயல் அதிகாரி நூதன தண்டனையை வழங்கிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நொய்டா மேம்பாட்டு ஆணைய (நொய்டா அத்தாரிட்டி) அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ஏராளமான ஊழியர்கழ் பணியாற்றி வருகின்றனர். நொய்டா மேம்பாட்டு ஆணைய தலைமைச் செயல் அதிகாரியாக டாக்டர் எம்.லோகேஷ் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அண்மையில், நொய்டாவிலுள்ள ஓக்லா தொழில்துறை வளர்ச்சி ஆணைய அலுவலகத்துக்கு முதியவர்...
ஹரியானாவில் 70 வயது தம்பதிக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது. மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.3 கோடியை வழங்க கணவர் ஒப்புக் கொண்டார். ஹரியானா மாநிலம், கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். 70 வயதைக் கடந்த இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு...
திருச்சூர் பூரம் திருவிழாவில் யானை அணிவகுப்புக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவின்போது ஏராளமான யானைகள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். இந்நிலையில் இந்த யானைகள் அணிவகுப்புக்கு கட்டுப்பாடு விதித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் யானைகள் அணிவகுப்பு எவ்வாறு நடைபெறவேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களையும் உயர்...
நாட்டில் சாக்கடை மாற்றும் செப்டிக் டேங்க் எனப்படும் கழிவு நீர் (எஸ்எஸ்டபிள்யு) அகற்றும் பணியாளர்களில் 67 சதவீதம் பேர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அதவாலே எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில்: இயந்திரமயமாக்கப்பட்ட "துப்புரவு சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை" (நமஸ்தே) திட்டத்தின் கீழ் சரிபார்க்கப்பட்ட தரவுகளின்படி சாக்கடை மற்றும் கழிவுநீர்...
உத்தர பிரதேச மாநிலம், சம்பல் நகரில் உள்ள ஜாமா மசூதி, கோயிலை இடித்து கட்டியதாக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி அம்மசூதியில் களஆய்வு நடத்தப்பட்டபோது ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்த மசூதியை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் திருடப்படுவதாகவும், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான சோதனையின்போது, தீபா சராய் பகுதியில் 46...
குளிர்காலத்தில் ஓய்வெடுப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள மாளிகைக்கு நேற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று வந்தடைந்தார். அவரை தெலங்கானா ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் ஹைதராபாத் அருகே உள்ள செகந்திராபாத் மாவட்டம், பொல்லாரத்தில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் ஓய்வெடுப்பது குடியரசுத் தலைவர்களுக்கு வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு குளிர்காலத்தில் ஓய்வெடுப்பதற்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விமானம் மூலம் ஹைதராபாத் வந்தார். முன்னதாக அவர்...
தமிழ்ப் புத்​தகத் திரு​விழா தலைவர் வணங்​கா​முடி நேற்று பெங்​களூரு​வில் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கர்நாடகத் தமிழ்ப் பத்திரி​கை​யாளர் சங்கத்​தின் சார்பாக கடந்த 2 ஆண்டு​களாக பெங்​களூரு​வில் தமிழ்ப் புத்​தகத் திரு​விழா நடத்​தப்​பட்​டது. இதற்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்​தது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டும், புத்​தகத் திரு​விழாவுக்கு ஏற்பாடு செய்​யப்​பட்டுள் ​ளது. டிசம்பர் 20-ம் தேதி காலை 10 மணிக்கு சிவாஜி நகர் அருகிலுள்ள‌ இன்ஸ்​டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்​தில்...
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) பரிசீலனைக்கு அனுப்ப மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பரிந்துரை செய்தார். கடந்த 2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார். இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில்...