Google search engine
இந்தியாவின் அரிய வகை பறவை இனங்களில் ஒன்று கான மயில். தற்போது இந்தியாவில் மொத்தம் 150 கான மயில்களே உள்ளன. இந்நிலையில், கான மயிலை பாதுகாக்கும் நோக்கிலும், அதன் இனத்தைப் பெருக்கும் நோக்கிலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2016-ம் ஆண்டு கான மயில் மீட்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள பாலை வன தேசிய பூங்காவில் கானமயில் இனப்பெருக்க மையம் அமைக்கப்பட்டது. கான மயில்களில்...
 ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் இதுவரை இல்லாத அளவில் தம்குடும்பத்தினரையும் வாரிசுகளையும் களமிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இங்கு முக்கிய போட்டியிலுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மற்றும் இண்டியா கூட்டணிகள் வெளியிடும் வேட்பாளர் பட்டியலில் அரசியல் கட்சி தலைவர்களின் வாரிசுகளும், குடும்பத்தினரும் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்று வருகின்றனர். இதில் முக்கியமாக வாரிசுஅரசியலை...
புதுடெல்லி: போரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்துக்கு 30 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் தீவிரவாதிகள நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோரை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர். அதனையடுத்து, காஸா மீதுஇஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்திய தாக்குதலில் 40,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக மாறியுள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ் மோதலையடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்...
புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த ஒருவர் டெல்லி உயர் நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “எனது மனைவி ஒரு திருநங்கை. திருமணத்துக்கு முன் இந்த உண்மையை அவர் மறைத்துவிட்டார். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற் காக அவருக்கு மத்திய அரசு மருத்துவமனையில் பாலின பரிசோதனை நடத்த டெல்லி போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த மனுவை வழக்கறிஞர் அபிஷேக் குமார் சவுத்ரி தாக்கல்...
ஆந்திர மாநிலம் தெனாலியை சேர்ந்தவர் உதய் (23). இவர் ஹைதராபாத்தில் உள்ள ராமசந்திராபுரம் அஷோக்நகரில் வசித்து வந்தார். இவர் கடந்தஞாயிற்றுக்கிழமை இரவு சந்தாநகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நண்பர்களுடன் சென்றார். நண்பர்கள் அனைவரும் அந்த ஓட்டலின் 3-வது மாடிக்கு சாப்பிடச் சென்றனர். அப்போது அங்கிருந்த நாய் ஒன்று, உதய்யை கண்டதும் குரைத்துக்கொண்டே அவரை துரத்தியது. இதனால் பயம் அடைந்த உதய், ஓட்டலின் பால்கனியில் ஓடியுள்ளார். அங்கும் நாய் துரத்தி...
 டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் வேளையில் ஹரியானாவில் பயிர் கழிவுகளை எரித்த 16 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில்காற்று மாசுபாடு தீவிரம் அடைகிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மேலும் சுகாதார பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. வாகனப் புகை, தொழிற்சாலை உமிழ்வு மற்றும் கட்டுமானப் பணிகளால் பரவும் தூசுக்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதும் டெல்லி காற்று மாசுபாட்டுக்கு...
வங்கக் கடலில் உருவாகியுள்ள டானா புயல் சின்னத்தையொட்டி, ஒடிசாவில் முன்னெச்சரிக்கையாக 800 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு டானா புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுநாளை (அக். 24-ம் தேதி) ஒடிசாவின் புரி - மேற்கு வங்கத்தின் சாகர் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்தில் 800 புயல் நிவாரண...
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் இண்டியா கூட்டணியில் ஆர்ஜேடி.க்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகள் முதல்கட்டதேர்தலை சந்திக்கின்றன. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும்25-ம் தேதி முடிவடைய உள்ளது.ஜார்க்கண்டில் பாஜக கூட்டணிதொகுதிப் பங்கீட்டை சுமுகமாகமுடித்து, வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. ஆனால் இண்டியா கூட்டணியில் இன்னும் தொகுதிப்...
ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம், ககான்கிர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கவுன்ட்டர்-இன்டெலிஜென்ஸ் காஷ்மீர் (சிஐகே) அதிகாரிகள் காஷ்மீரின்சில பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 14 செல்போன்கள், ஒரு லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சிஐகே நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஸ்ரீநகர், கந்தர்பால், பண்டி...
மேற்கு வங்கத்தில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் ஒருவர்கடந்த ஆக.9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதிகேட்டு மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் மாநில அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று 42 நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 21-ம் தேதி தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இந்த சூழ்நிலையில், படு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை...