தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகள் மூலமாக மத்திய அரசுக்கு ரூ.1.44 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: தேசிய நெடுஞ்சாலைகளில் பிபிபி எனப்படும் பொது தனியார் பங்களிப்பு மாடல் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களிடமிருந்து கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரையில் ரூ.1.44 லட்சம் கோடி சுங்க கட்டணமாக மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது.
சுங்க சாவடிகளில் வாகனங்கள் சுமுகமாக சென்று வரும் வகையில் பாஸ்டேக் முறை பயன்படுத்தப்பட்டு மின்னணு முறையில் சுங்க கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் (ஜிஎன்எஸ்எஸ்) அடிப்படையிலான சுங்க அமைப்பு இதுவரை எங்கும் செயல்படுத்தப்படவில்லை. இவ்வாறு பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.