இந்தியா - பாகிஸ்தான் இடையே கைதிகளை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தம் கடந்த 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் கைதிகள் பரிமாறிக் கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்திய சிறைகளில் தற்போது பாகிஸ்தானைச் சேர்ந்த 381 சிவில் கைதிகளும், 81 மீனவர்களும் உள்ளனர். அதேபோல் பாகிஸ்தானில் இந்திய சிவில் கைதிகள் 49 பேரும், 217 மீனவர்களும் உள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் தண்டனை காலம்...
கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது "அமைச்சர் அமித் ஷா கொலை வழக்கின் குற்றவாளி" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் விஜய் மிஸ்ரா, உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்...
‘வளர்ந்த இந்தியா’வுக்கு கடினமாக உழைப்போம்: ஆங்கில புத்தாண்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
admin - 0
வளர்ந்த இந்தியா கனவை நனவாக்க இன்னும் கடினமாக உழைப்போம் என புத்தாண்டு தினத்தில் பிரதமர் மோடி உறுதி எடுத்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்று வாழ்த்து செய்தி வெளியிட்டார். அதில் இந்தாண்டு அனைவருக்கும் புதிய வாயப்புகள், வெற்றி மற்றும் முடிவற்ற மகிழ்ச்சியை கொண்டு வரட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், செழிப்பும் கிடைக்கட்டும்’’ என கூறியுள்ளார். வளர்ந்த இந்தியா கனவை நனவாக்க நாங்கள் இன்னும் கடினமாக உழைப்பதில் உறுதியாக உள்ளோம்...
வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கும் வகையில் சட்டம் இயற்றக் கோரி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, விவசாயிகள் எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளின் பிரதிநிதி ஜெகஜித் சிங் தல்லிவால் (70), கன்னவுரி எல்லையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த நவம்பர்...
மகா கும்பமேளா வரும் 13-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த விழாவுக்காக உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் மஹந்த் ரவீந்திர புரி சாதுக்களுடன் சென்று நேற்று ஆய்வு செய்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கும்பமேளா நடைபெறும்போது பிரயாக்ராஜில் டீக்கடைகள், பழச்சாறு கடைகள் மற்றும் பூக்கடைகள் வைப்பதற்கு இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி அளிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்தால் அவர் எச்சில்...
ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தப்பியோடிய 2 தீவிரவாதிகளின் சொத்துகளை போலீஸார் முடக்கியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம், பட்டியன்-தனமண்டி பகுதியை சேர்ந்த இஷ்தியாக் அகமது, ஜாகித் அலி கான் ஆகிய இருவரும் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தப்பியோடிய இவர்கள், அங்கிருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இருவருக்கும் சொந்தமான நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீஸார் நேற்று...
வேலைக்காக தமிழகத்தில் குடியேறவே வங்கதேச முஸ்லிம்கள் அதிக அளவில் ஊடுருவல்: அசாம் முதல்வர் தகவல்
admin - 0
தமிழக ஜவுளி துறையில் வேலை பெற வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவே எல்லையில் அதிகளவில் வங்கதேச முஸ்லிம்கள் ஊடுருவி வருவதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: அசாம் எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேச முஸ்லிம்களில் பெரும்பாலானோர் ஜவுளித் துறை பணியாளர்கள். அங்குள்ள மோசமான சூழல் காரணமாக அவர்கள் தமிழக ஜவுளி துறையில் பணியில் சேர்வதற்காக அசாம்...
இந்தாண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் 2021-22 முதல் 2025-26 வரை ரூ.69,515.71 கோடி ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மற்றும் வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை 2025-26 வரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த முடிவு 2025-26 வரை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இயற்கைப் பேரழிவுகளிலிருந்து பயிர்களை பாதுகாக்க உதவும்.
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், மறுசீரமைக்கப்பட்ட...
டெல்லி மாடல் டவுண்ஸ் கல்யாண் விகார் பகுதியில் வசித்தவர் புனித் குரானா. இவருக்கு வயது 40. இவருடைய மனைவி மனிகா ஜகதீஷ் பாவா. இருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் சேர்ந்து டெல்லியில், ‘உட்பாக்ஸ் கபே’ என்ற பெயரில் ஓட்டல் ஒன்று தொடங்கினர். இதற்கிடையில், இருவருக்கும் இடையில் வியாபாரம் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் முற்றி உள்ளது.
இதையடுத்து, இருவரும் விவாகரத்து கோரி வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கில்...
ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் இலவச தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசிக்க 14 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு, நேற்று அதிகாலை 2 மணிக்கு திருப்பாவை சேவையும், அதனைத் தொடர்ந்து அர்ச்சனை, தோமாலை சேவை என ஆர்ஜித சேவைகள் நடைபெற்றன. முதல்வர் சந்திர பாபு நாயுடு, நேற்று காலை விஜயவாடாவில் உள்ள கனகதுர்கையம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை...










