Google search engine
“மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் அமல்படுத்துங்கள்” என்று மத்திய அரசை, ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து ராகுல் காந்தி நேற்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், “இந்திய பெண்களின் ஆற்றல் முடக்கப்பட்டுள்ளது. அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. கனவு காணவும் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள முடியாத ஒரு நாடு நிச்சயம் வெற்றி பெற முடியாது” என்று ராகுல்...
செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) மற்​றும் ‘டீப் பேக்’ போலி பதிவு​களைத் தடுக்க, தகவல் தொழில்​நுட்ப விதி​கள் 2021-ல் செய்​யப்​பட்ட புதிய திருத்​தத்​தின்​படி, பாலியல் மற்​றும் ஆபாச பதிவு​களை அகற்ற சமூக ஊடகங்​களுக்கு இருந்த காலக்​கெடுவை 24 மணி நேரத்​திலிருந்து 2 மணி நேர​மாகக் குறைத்து மத்​திய அரசு நடவடிக்கை எடுத்​துள்​ளது. அரசு அல்​லது நீதி​மன்ற உத்​தர​வுப்​படி சட்​ட​விரோத மற்​றும் சர்ச்​சைக்​குரிய பதிவு​களை அகற்ற இருந்த காலக்​கெடு 36 மணி நேரத்தில்...
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்குப் பெயர் மாற்றம் செய்ய சீனா தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் நிலையில், 'சர்வே ஆஃப் இந்தியா'வின் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் 27 இடங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அருணாச்சலப் பிரதேச மாநில அரசுடன் கலந்தாலோசித்து, இந்திய அரசு, 'சர்வே ஆஃப் இந்தியா'வின் அதிகாரப்பூர்வ வரைபடங்களில் அம்மாநிலத்தில் அமைந்துள்ள 27 இடங்கள் மற்றும் புவியியல் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அருணாச்சலப்...
கடன் வாங்​கிய​வர்​களை மிரட்​டு​தல், திட்​டு​தல், சமூக வலை​தளங்​களில் தொல்லை தருதல் போன்ற செயல்​களில் வங்கி ஏஜெண்டுகள் ஈடு​படக்​ கூ​டாது என்று இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதி​களை வெளி​யிட்​டுள்​ளது. இது கடன் வாங்​கிய​வர்​களுக்கு பெரிய அளவில் நிம்​ம​தியை அளிக்கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்​தி​யா​வில் வங்​கி​கள் மற்​றும் நிதி நிறு​வனங்​களிடம் கடன் பெற்று தவணையை செலுத்தத் தவறும் வாடிக்​கை​யாளர்​களை, வசூல் முகவர்​கள் அச்​சுறுத்​து​வதைத் தடுக்​கும் நோக்​கில் இந்​திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்த...
இந்​திய விமானப் படை​யின் அதிநவீன ‘பைட்​டர் காம்பாட் லீடர்’ படிப்பை வெற்​றிகர​மாக நிறைவு செய்​து, இந்​தி​யா​வின் முதல் பெண் ‘டாப் கன்’ போர் விமானி என்ற வரலாற்​றுச் சாதனையை ஸ்கு​வாட்​ரன் லீடர் பாவனா காந்த் படைத்​துள்​ளார். சுமார் 20 வாரங்​கள் நடை​பெற்ற அதிதீ​விர வான்​வழித் தாக்​குதல் மற்​றும் உத்​தி​களுக்​கான உயர் பயிற்​சியை நிறைவு செய்​ததன் மூலம், நாட்​டின் தலைசிறந்த போர் விமானிகளின் வரிசை​யில் அவர் இணைந்​துள்​ளார். இந்​திய விமானப் படை​யின்...
பிரதமர் நரேந்​திர மோடியை இஸ்​ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்​கிய ஆலோ​சனை மேற்​கொண்​டார். இந்த உரை​யாடலின் போது, இந்​தியா - இஸ்​ரேல் இடையி​லான முக்​கிய கூட்​டாண்​மையை ஆய்வு செய்த இரு தலை​வர்​களும், பல்​வேறு துறை​களில் இருதரப்பு உறவை மேலும் வலுப்​படுத்த உறு​தி​யேற்​றனர். மேற்கு ஆசிய போர் சூழல் குறித்​துப் பேசிய இரு தலை​வர்​களும், தொடர்ந்து தொடர்​பில் இருப்​பது என முடிவு செய்​தனர். கடந்த பிப்​ர​வரி மாதம்...
மாநிலங்களவையில் எம்.பி.க்கள் சஞ்சய் சிங் மற்றும் வி. சிவதாசன் எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா நேற்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், கடந்த 2025-ம் ஆண்டில் பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்காக சுமார் ரூ.187 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பிரான்ஸுக்குச் செல்ல ரூ.25.59 கோடியும், பிரேசிலுக்கு செல்ல ரூ.17.72 கோடியும், அமெரிக்கா வுக்கு செல்ல ரூ.16.54 கோடியும், சவுதி அரேபியாவுக்கு செல்ல ரூ.15.54 கோடியும், சீனாவுக்கு...
பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் டெல்​லி​யில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்​டம் நடை​பெற்​றது. இந்த கூட்டத்​தில் ரூ.23,731 கோடி மதிப்​பிலான தேசிய ஒருங்​கிணைந்த உயிரி எரி​வாயு திட்​டத்​துக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. புதிய திட்டத்​துக்கு கோபர்​தன் என்று பெயர் சூட்​டப்​பட்டு உள்​ளது. இதன்​படி கிராமங்​கள்​தோறும் வேளாண் கழி​வு​கள், மாட்​டு சாணம், சர்க்​கரை ஆலை கழி​வு​கள், காய்​கனி கழி​வு​கள் ஆகிய​வற்​றின் மூலம் உயிரி எரி​வாயு உற்​பத்தி செய்​யப்​படும். நடப்பு 2026-27 நிதி​யாண்டு முதல் 2035-36...
உத்​தரபிரதேச மாநிலத்​தைச் சேர்ந்​தவர் அதிக் அகமது. பிரபல ரவுடி கும்​பல் தலை​வரும் அரசி​யல்​வா​தி​யு​மான இவரை ஒரு வழக்​கில் கடந்த 2023 ஏப். 15-ம் தேதி போலீ​ஸார் கைது செய்தனர். பிர​யாக்​ராஜில் மருத்​து​வப் பரிசோதனைக்​காக மருத்​து​வக் கல்லூரிக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டார். அப்​போது, செய்தியாளர்களாக நடித்து உடன் வந்த மூவர், அதிக் அகமது (60) மற்​றும் அவரது சகோ​தரர் அஷ்ரஃபை துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொன்றனர். இந்த இரட்​டைக் கொலை சம்​பவம் அப்​போது நாடு...
கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறு​வனர் அபிஜித் திப்கே செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: சிஜேபி அமைப்பை அரசி​யல் கட்​சி​யாக மாற்​றும் எந்த எண்ணமும் எங்​களுக்கு இல்​லை. குறிப்​பாக எங்​கள் அமைப்பை எவ்​வாறு விரிவுபடுத்​து​வது, மக்​களின் நலனுக்​காக நாம் எடுக்க வேண்​டிய பிரச்​சினை​களைக் கண்​டறிவது மற்​றும் இயக்கத்துக்கான வரைபடத்தை உரு​வாக்​கு​வது குறித்து விவாதிப்​போம். விரை​வில் தேசிய அளவில் பிரச்​சா​ரக் குழு ஒன்றை அமைத்​து, ‘மக்கள் என்ன சொல்​கிறார்​கள்’ (க்யா போல்தி பப்​ளிக்)...