அருணாச்சலப் பிரதேசத்தின் 27 முக்கிய இடங்கள் இந்திய வரைபடத்தில் பதிவு: சீனாவுக்கு பதிலடி

0
24

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்குப் பெயர் மாற்றம் செய்ய சீனா தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் நிலையில், ‘சர்வே ஆஃப் இந்தியா’வின் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் 27 இடங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அருணாச்சலப் பிரதேச மாநில அரசுடன் கலந்தாலோசித்து, இந்திய அரசு, ‘சர்வே ஆஃப் இந்தியா’வின் அதிகாரப்பூர்வ வரைபடங்களில் அம்மாநிலத்தில் அமைந்துள்ள 27 இடங்கள் மற்றும் புவியியல் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்திற்கான ‘சர்வே ஆஃப் இந்தியா’ வரைபடத்தில் இவற்றை முறையாகப் பதிவு செய்வதன் நோக்கம், அவற்றைத் துல்லியமாக அடையாளம் காண்பதை எளிதாக்குவதும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகும்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஜாங்னான்’ என்று குறிப்பிட்டு அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கான பெயர்களை சீனா அவ்வப்போது வெளியிட்டு வரும் நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சீனாவின் பெயர் மாற்றும் முயற்சியை அபத்தமானது என்று இந்தியா பலமுறை விமர்சித்துள்ளது. அத்துடன், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக “இருந்தது, இருக்கிறது மற்றும் இருக்கும்” என்று இந்தியா உறுதியாக கூறியுள்ளது.

இந்தியா வரைபடத்தில் குறிப்பிட்ட 27 இடங்களின் பட்டியல்:

1. லாங்ஜு

2. மாஜா

3. பிசா

4. சோ லா

5. ரிசா லா

6. புகுர் லா

7. தாக் லா

8. சம்போ சரோவர்

9. பாரா குண்டுன்

10. சோட்டா குண்டுன்

11. தன் பாரி

12. பிரீத்நகர்

13. புத்தமந்திர்

14. ஜெயராம்பூர்

15. டெரிட்நகர்

16. ராம்நகர்

17. ஜஸ்வந்த் கர்

18. சாகர்

19. பத்மா

20. ஜோதிநகர்

21. பைசாகி

22. ஷேர்-இ-தாபா நினைவிடம்

23. சோட்டா ரோபுக்

24. பாரா ரோபுக்

25. சிவாஜி நகர்

26. சுன்புரா

27. கம்லாங் நகர்

இந்தியாவின் அதிகாரப்பூர்வ நில அளவை வரைபடத்தில் (Survey of India map), இந்த இடங்களின் பெயர்கள் மற்றும் இருப்பிடங்கள் முறையாகக் குறிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here