நெடுஞ்சாலைகளில் குழிகள், மின் விளக்கு பழுதுகளைக் கண்டறிய 50,000 கி.மீ.க்கு வாகன கேமரா கண்காணிப்பு

0
13

நாடு முழு​வதும் உள்ள தேசிய நெடுஞ்​சாலைகளில் உள்ள குழிகள் மற்​றும் பழுதுகளைக் கண்​டறிய, சுமார் 50,000 கி.மீ. தூரத்​துக்கு டேஷ்​கேம் (வாக​னக் கேமரா) பொருத்தி கண்​காணிப்பை இந்​திய தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யம் தொடங்​கி​யுள்​ளது.

சாலைப் பராமரிப்​பில் ஒப்​பந்​ததா​ரர்​களும் அதி​காரி​களும் செய்​யும் காலதாமதத்​தையும், பொறுப்​பி​லிருந்து தப்​பிக்க முயலும் போக்​கையும் கட்​டுப்​படுத்​தவே இத்​திட்​டம் கொண்​டுவரப்​பட்​டுள்​ளது.

ரோந்து வாக​னங்​களில் பொருத்​தப்​பட்​டுள்ள கேம​ராக்​கள் வாரந்​தோறும் நெடுஞ்​சாலைகளில் சென்று, 2 அங்​குலக் குழிகள், மங்​கிய சாலைக் கோடுகள், பழுதான விளக்​கு​கள், அனுமதி​யற்ற பாதைகள் உள்​ளிட்ட பழுதுகளைப் படம் பிடிக்​கின்​றன. துல்​லிய​மான இடம் மற்​றும் புகைப்​பட ஆதா​ரங்​களு​டன் இந்​தத் தகவல்​கள் மையக் கட்​டுப்​பாட்டு அறை​யின் கணி​னி​யில் பதிவேற்​றப்​படு​கின்​றன. சம்​பந்​தப்​பட்ட ஒப்​பந்​ததா​ரர்​களும் கள அதி​காரி​களும் அவற்​றைப் பார்க்​கலாம்.

விதி​களின்​படி குழிகளை அடைக்க 2 நாட்​களும், பழுதான விளக்​கு​கள் மற்​றும் பணிமனை பாது​காப்​புக் குறைபாடுகளைச் சரிசெய்ய ஒரு நாளும், அனுமதி​யற்ற திறப்​பு​களை மூட 7 நாட்​களும் கால அவகாசம் வழங்​கப்​படு​கிறது. பழுதைச் சரிசெய்​ததற்​கான புகைப்​பட ஆதா​ரத்​தைப் பதிவேற்ற வேண்டும்.

தற்​போது ஒப்​பந்த விதி​களின்​படி அபராதம் கணக்​கிடப்​படும் நிலை​யில், அடுத்த சில மாதங்​களில் மனிதத் தலை​யீடின்​றித் தானியங்கி முறை​யில் கணக்​கிடப்​படும். தரம் குறைந்த பணிக்​குப் பொறுப்​பானவர்​கள் அபராதத்​தையும், சில சமயம் கறுப்​புப் பட்​டியலை​யும் எதிர்​கொள்​வார்​கள் என்று மத்​திய சாலை போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் நிதின் கட்​கரி கூறியுள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here