இந்திய விமானப் படையின் ‘டாப் கன்’ பயிற்சி மையத்தில் சாதனை படைத்த முதல் பெண் அதிகாரி பாவனா காந்த்

0
25

இந்​திய விமானப் படை​யின் அதிநவீன ‘பைட்​டர் காம்பாட் லீடர்’ படிப்பை வெற்​றிகர​மாக நிறைவு செய்​து, இந்​தி​யா​வின் முதல் பெண் ‘டாப் கன்’ போர் விமானி என்ற வரலாற்​றுச் சாதனையை ஸ்கு​வாட்​ரன் லீடர் பாவனா காந்த் படைத்​துள்​ளார்.

சுமார் 20 வாரங்​கள் நடை​பெற்ற அதிதீ​விர வான்​வழித் தாக்​குதல் மற்​றும் உத்​தி​களுக்​கான உயர் பயிற்​சியை நிறைவு செய்​ததன் மூலம், நாட்​டின் தலைசிறந்த போர் விமானிகளின் வரிசை​யில் அவர் இணைந்​துள்​ளார். இந்​திய விமானப் படை​யின் மிக உயரிய மற்​றும் கடுமை​யான பயிற்சி மையங்​களில் ஒன்​றான குவாலியரில் உள்ள ‘டேக்​டிக்ஸ் அண்ட் ஏர் காம்​பாட் டெவலப்​மென்ட் எஸ்​டாப்​ளிஷ்மென்ட்’ மையத்​தில் இந்​தப் பயிற்சி வழங்​கப்​படு​கிறது.

33 வயதாகும் பாவனா காந்த், பிஹார் மாநிலம் தார்​பங்​கா​வில் பிறந்​தவர். சிறு​வயது முதலே விமானி​யாக வேண்​டும் என்ற கனவோடு வளர்ந்த இவர், இந்​திய வான்​வழி வரலாற்​றில் பல்​வேறு திருப்​பு​முனை​களை ஏற்​படுத்​தி​யுள்​ளார். இந்​தி​யா​வில் முதன்​முறை​யாக பெண்​களுக்​குப் போர் விமானி கதவு​கள் திறக்​கப்​பட்​ட​போது, அவனி சதுர்​வேதி மற்​றும் மோகனா சிங் ஆகியோ​ருடன் இணைந்து நாட்​டின் முதல் பெண் போர் விமானி​யாக பொறுப்​பேற்​றார்.

பெண் போர் விமானி​யாகப் பொறுப்​பேற்​றது முதல், தற்​போது மிக​வும் கடின​மான ‘டாப் கன்’ படிப்பை நிறைவு செய்​தது வரையி​லான பாவனா காந்​தின் 8 ஆண்​டு​கால உழைப்​பு, இந்​தி​யப் பாது​காப்​புப் படைகளில் தடம் பதிக்​கும் ஆயிரக்​கணக்​கான இளம்​ பெண்​களுக்​குப்​ மிகப்​பெரிய உத்​வேக​மாக அமைந்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here