நடிகர் விஷ்ணு விஷால் நடித்த 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'கட்டா குஸ்தி', ‘கட்டா குஸ்தி 2’ படங்களின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் செல்லா அய்யாவு. இவர் அடுத்து கென் கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில், 'கட்டா குஸ்தி -3’ உருவாக வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது: 'கட்டா குஸ்தி’-க்கு கிடைத்த வரவேற்புதான் அந்தப் படத்தின் அடுத்த பாகம் உருவாகக் காரணம். பொதுவாகவே...
“ஒரு பெரும் அன்பை, பேரன்பைச் சொல்ல வரும் படம்தான் ‘ஆகாயம்’. அன்புக்கு முன்னால இங்க எதுவுமே இல்லை. அளவில்லா அன்பைச் சொல்ற கதைங்கறதாலதான் ‘ஆகாயம்’னு தலைப்பு வச்சோம்” என்று ஆரம்பிக்கிறார் இயக்குநர் ‘தினந்தோறும்’ நாகராஜ். ஸ்ரீராம் கார்த்திக், ஆலிஷா மிராணி நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை டெல்டா டாக்கீஸ் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து தயாரித்துள்னர். படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ரிலீஸ் வேலைகளில் இருந்த ‘தினந்தோறும்’...
ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி, சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால் சனிக்கிழமை இரவு (ஆகஸ்ட் 8) கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி திட்டமிட்டபடி வணிக வளாகத்துக்கு வந்தடைந்தார். எனினும், அவரைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால், அவரால் மேடையை நெருங்க முடியாத சூழல் ஏற்பட்டது. கூட்டம்...
ஒரு திரைப்​படத்​துக்​குத் தேவை​யான 70-க்​கும் மேற்​பட்ட துறை சார்ந்த பணி​களை எந்​த​வித உதவி​யாளர்​களும் இல்​லாமல் தொடக்​கம் முதல் இறு​திவரை ஒரே ஆளாகச் செய்து ‘ஒன் மேன்’ என்ற படத்தை உரு​வாக்கி இருக்​கிறார் சங்ககிரி ராஜ்குமார். இப்​படம் ஆக. 21-ல் திரையரங்​கு​களில் வெளி​யாக இருக்​கிறது. இது பற்றி சங்ககிரி ராஜ்குமார் கூறும்​போது, “இதில் இடம்​பெற்​றுள்ள அத்​தனை கதா​பாத்​திரங்​களி​லும் நானே நடித்​திருக்​கிறேன். படத்​தைப் பார்க்​கும்​போது ஒவ்​வொரு​வரும் தனித்​தனி கதா​பாத்​திரங்​களாகவே தோன்​று​வார்​கள். இவனிடம் இருந்து...
இளம் தலை​முறை​யினருக்கு சமூக விழிப்​புணர்வை ஏற்​படுத்​தும் நோக்​கில் உரு​வாகி​யுள்ள திரைப்​படம், ‘செய்! செய்​யாதே!’. ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்​பில் கலி​போர்​னி​யா​வில் வசிக்​கும் சுப்​புலட்​சுமி ஜெய​ராம் தயாரித்​துள்ள இந்​தப் படத்தை டாக்​டர் எஸ். ராஜா கதை, திரைக்​கதை எழுதி இயக்​கி​யுள்​ளார். இதில் பாஜகவைச் சேர்ந்த ஹெச்​.​ராஜா தமிழக முதல்வராக சிறப்​புக் கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்​ளார். டாக்​டர் எஸ். ராஜா, குரு விஜய், தர்​ஷினி ரெட்​டி, பிர​திக் ஷா மனோ பிர​சாந்த், சிதம்​பரம், மவுனிகா...
அடுத்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நயன்தாரா – கவின் நடித்திருக்கும் ‘ஹாய்’ படம் ஆகஸ்ட் 28-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்து கவின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘பல பல சூப் வாங்கின பாய் ஆகஸ்ட் 28-ல் உங்களை சந்திக்கிறான்’ என தெரிவித்துள்ளார். அத்துடன் வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார். வீடியோவில், ரிலீஸ் தேதி அறிவிப்பு என ஆங்கிலத்தில் வருகிறது....
“நூற்றுக்கணக்கான தலைசிறந்த எழுத்தாளர்கள் இருந்தும் அவர்களின் எழுத்துகள் திரைப்படங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. திரைத்துறையில் எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்” என்று தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் தெரிவித்தார். புதுவை திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் 3-வது உலக திரைப்பட விழா, புதுச்சேரியில் இன்று தொடங்கியது. அலையன்ஸ் பிரான்சிஸ் கருத்தரங்கு கூடத்தில் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் ஹரிஹரன் விழாவைத்  தொடங்கி வைத்து பேசியது: “திரைப்படம்  நம்மை...
தருண் விஜய், அக் ஷரா ரெட்டி நாயகன்​–​நாயகி​யாக நடிக்​கும் படம் ‘மாஸ்​டர் பிளான்’. இதில் பாவல் நவகீதன், திவ்ய ஜகத், அப்​பு​குட்​டி, தீபா சங்​கர், தேனப்​பன் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். கே.எஸ். பழனி ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு ஏ.ஜே.அலி மிர்​சாக் இசை அமைக்​கிறார். உத்ரா புரொடக் ஷன்​ஸ், டிஜே இன்​டர்​நேஷனல் தயாரிக்​கும் இப்​படத்​தை, செ.ஹரி உத்ரா எழுதி இயக்​கு​கிறார். இதன் முதல் தோற்ற போஸ்​டர் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. “தகு​திக்கு மீறிய...
நவீன் இயக்​கி, நடித்து 2013-ம் ஆண்டு வெளி​யாகி வரவேற்​பைப் பெற்ற படம், ‘மூடர் கூடம்’. வித்​தி​யாச​மான நகைச்​சுவை, விநோத​மான கதா​பாத்​திரங்​கள் மூலம் கவனிக்​கப்​பட்ட இப்​படத்​தின் அடுத்த பாகம் இப்​போது உரு​வாகி​யுள்​ளது. முதல் பாகத்தை இயக்​கிய நவீன் ஹித​யத் எழுதி இயக்​கி, நடித்​துள்​ளார். இதில், ஓவி​யா, சென்​ராயன், ராஜாஜி, குபேரன், ஜெயப்​பிர​காஷ் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். சூரஜ் நல்​லு​சாமி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். அம்​ரீஷ் இசையமைத் துள்ள இந்​தப் படத்​துக்​கு, நடராஜன் சங்​கரன்...
தனது அறிமுகப் படமான 'ராக்கி' மூலம் தமிழ் சினிமாவில் ரத்தமும் வன்முறையும் நிறைந்த திரை மொழியை வெளிப்படுத்தியவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அசர வைக்கும் கேமரா ஆங்கிள்கள், வியக்க வைக்கும் ஃப்ரேம்கள் ஆகியவை இருந்தாலும் ஏனோ அவரது அடுத்தடுத்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பேசப்படவில்லை. தற்போது இயக்குநரிலிருந்து ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து தனது முந்தைய படங்களில் விட்டதை அருண் மாதேஸ்வரன் இதில் பிடித்தாரா என்று பார்க்கலாம். காவல்...