‘மீசைய முறுக்கு 2’ பட விழாவில் கடும் நெரிசல்: ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரிய ஹிப்ஹாப் ஆதி – பின்னணி என்ன?

0
28

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி, சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால் சனிக்கிழமை இரவு (ஆகஸ்ட் 8) கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி திட்டமிட்டபடி வணிக வளாகத்துக்கு வந்தடைந்தார். எனினும், அவரைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால், அவரால் மேடையை நெருங்க முடியாத சூழல் ஏற்பட்டது. கூட்டம் தொடர்ந்து அதிகரித்ததால் நெரிசல் மற்றும் தேவையற்ற அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் காவல்துறை எச்சரித்தது. அதிகாரிகளின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு ஆதி அங்கிருந்து உடனடியாக வெளியேறினார்.

பின்னர் இரவு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்ட ஆதி, ரசிகர்களைச் சந்திக்க மிகுந்த ஆர்வத்துடன் வந்ததாகவும், அவர்களின் பாதுகாப்பைக் கருதியும் காவல்துறையின் உத்தரவை மதித்தும் இந்நிகழ்ச்சியை நடத்த முடியாமல் போனது ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரசிகர்களின் அளவற்ற அன்பு மகிழ்ச்சியளித்தாலும், அவர்களுடன் விழாவைக் கொண்டாட முடியவில்லையே என்ற வருத்தத்தையும் வெளிப்படுத்தினார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஃபீனிக்ஸ் மால் நிர்வாகம், பார்வையாளர்கள், கலைஞர் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவல்துறையின் ஆலோசனையின் பேரில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here