புதிய முயற்சியில் உருவான ‘ஒன் மேன்’

0
30

ஒரு திரைப்​படத்​துக்​குத் தேவை​யான 70-க்​கும் மேற்​பட்ட துறை சார்ந்த பணி​களை எந்​த​வித உதவி​யாளர்​களும் இல்​லாமல் தொடக்​கம் முதல் இறு​திவரை ஒரே ஆளாகச் செய்து ‘ஒன் மேன்’ என்ற படத்தை உரு​வாக்கி இருக்​கிறார் சங்ககிரி ராஜ்குமார். இப்​படம் ஆக. 21-ல் திரையரங்​கு​களில் வெளி​யாக இருக்​கிறது.

இது பற்றி சங்ககிரி ராஜ்குமார் கூறும்​போது, “இதில் இடம்​பெற்​றுள்ள அத்​தனை கதா​பாத்​திரங்​களி​லும் நானே நடித்​திருக்​கிறேன். படத்​தைப் பார்க்​கும்​போது ஒவ்​வொரு​வரும் தனித்​தனி கதா​பாத்​திரங்​களாகவே தோன்​று​வார்​கள். இவனிடம் இருந்து அவன் எப்​படி தப்​பிப்​பான், அவனால் இவனுக்கு என்ன பிரச்​சினை ஏற்​படும் என்​பது போன்ற கேள்வி​களை எழுப்​பும் வகை​யில் ஒவ்​வொரு காட்​சி​யும் அமைந்​துள்​ளது.

இதில் பரபரப்​பான ஹெலி​காப்​டர் சேசிங் காட்​சி, ரயில் விபத்​துக் காட்​சி, அமெரிக்​கா​வில் படமாக்​கப்​பட்ட கார் சேசிங் காட்​சி,உள்​ளிட்​டவை போன்​றவை இடம்​பெற்​றுள்​ளன. சிறப்​புக் காட்​சி​யில் படத்​தைப் பார்த்த திரைத்​துறை​யினர் ஆச்​சரி​யத்​துடன் பாராட்​டி​யுள்​ளனர்” என்​றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here