முதல்வராக ஹெச்​.​ராஜா நடிக்கும் ‘செய்! செய்யாதே!’

0
25

இளம் தலை​முறை​யினருக்கு சமூக விழிப்​புணர்வை ஏற்​படுத்​தும் நோக்​கில் உரு​வாகி​யுள்ள திரைப்​படம், ‘செய்! செய்​யாதே!’. ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்​பில் கலி​போர்​னி​யா​வில் வசிக்​கும் சுப்​புலட்​சுமி ஜெய​ராம் தயாரித்​துள்ள இந்​தப் படத்தை டாக்​டர் எஸ். ராஜா கதை, திரைக்​கதை எழுதி இயக்​கி​யுள்​ளார்.

இதில் பாஜகவைச் சேர்ந்த ஹெச்​.​ராஜா தமிழக முதல்வராக சிறப்​புக் கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்​ளார். டாக்​டர் எஸ். ராஜா, குரு விஜய், தர்​ஷினி ரெட்​டி, பிர​திக் ஷா மனோ பிர​சாந்த், சிதம்​பரம், மவுனிகா ப்ரீத்தி உள்பட பலர் நடித்​துள்​ளனர்.

இப்​படம் பற்றி இயக்​குநர் டாக்​டர் எஸ். ராஜா கூறும்​போது, ‘‘இப்​படம் மருத்​து​வத் துறையை பற்​றிய படம். இன்​றைய இளம் தலை​முறையை அச்​சுறுத்​தும் போதைப்​பொருள் பழக்​கம், சுயமருந்து உட்​கொள்​ளுதல் போன்ற முக்​கிய சமூகப் பிரச்​சினை​களை இப்​படம் பேசுகிறது.

படத்​துக்​காக அமெரிக்​கா​வில் இருந்து பலமுறை வந்து பல கஷ்டங்​களோடு இதை உரு​வாக்​கி​யுள்​ளேன். தமிழ் சினி​மா​வில் பலர் வாய்ப்​பு​களுக்​காகக் காத்​திருக்​கின்​றனர்​. அவர்​களுக்​குச்​ சரி​யான வாய்ப்​பு​களைத்​ தந்​து நல்​ல படைப்​பு​களைத்​ தர வேண்​டும்​ என்​பது மட்​டும்​தான்​ ஆசை” என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here