Google search engine

கொல்லங்கோடு: போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

கொல்லங்கோடு அடுத்த ரோபின் (35) என்ற பட்டதாரி வாலிபரை அடிதடி வழக்கு சம்பந்தமாக கடந்த மாதம் 22ஆம் தேதி கொல்லங்கோடு போலீசார் கைது செய்தனர். அவரை வழக்கிலிருந்து விடுவிக்க பணம் பெற்றதாக அவரது அக்கா ரீனா (42) என்பவர் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தேமுதிக...

பைங்குளம்: உழவரைத் தேடி வேளாண்மை முகாம்

வேளாண்மை துறையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள உழவரைத் தேடி வேளாண்மை என்ற முகாம் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையினர் சார்பில் முஞ்சிறை வட்டாரம் பைங்குளத்தில் நேற்று நடந்தது. முகாமினை வேளாண்மை துறை, கால்நடை துறை, கூட்டுறவு துறை, மீன்வளத்துறை மற்றும் வேளாண் வணிக துறை அலுவலர்கள் கலந்து...

கிள்ளியூர்: குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி துவக்கம்

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஐரேனிபுரம் முதல் திக்கணங்கோடு வரை சாலையின் நடுவே சுனாமி கூட்டுக்குடிநீர் திட்ட ராட்சத சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட்டிருந்தது. இதை நவீன முறையிலான DI பைப்புகளை பதிக்க கிள்ளியூர் எம்எல்ஏ அரசிடம் கோரிக்கை விடுத்தார்.  இதற்காக ரூ. 26.68 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்தது....

கருங்கல்: தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு விருது

தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் கருங்கல் கிளை சிறப்பு கூட்டம் தலைவர் ஜோஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் செயலாளர் அலெக்சாண்டர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், 2024-25 கல்வி ஆண்டில் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் கருங்கல் ஆர். சி. தெருவைச் சார்ந்த ஜெய்சன்...

நாகர்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். இதில் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வகித்தார். மாநகர நல அதிகாரி ஆல்பர்...

களியக்காவிளை: காதல் தோல்வி.. வாலிபர் தற்கொலை

களியக்காவிளை ஆர் சி தெருவை சேர்ந்தவர் ராஜன் மனைவி மினி (47), இந்த தம்பதிக்கு ரெனிஷ் (24) என்ற மகன் இருந்தார். ராஜன் ஏற்கனவே இறந்து விட்டார். ரெனிஷ் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் தற்போது ரெனிஷின் காதல் தோல்வியில்...

கீழ்குளம்: அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறைகள் கட்ட நிதி

கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கீழ்குளம் மேற்கு அரசு தொடக்கப் பள்ளி கட்டிடங்கள் தற்போது பழுதடைந்து உள்ளன. இதையடுத்து நிர்வாகிகள், பெற்றோர் ஆகியோர் புதிய கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும் என கிள்ளியூர் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து தமிழ்நாடு அரசு தற்போது கீழ்குளம் மேற்கு அரசு தொடக்கப்பள்ளியில்...

குலசேகரம்: 40 வழக்குகளில் தொடர்புடைய திருடன் கைது

திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (40). இவர் மீது குலசேகரம், அருமனை உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஜெகன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வந்து, தற்போது அவர் களியல்...

தக்கலை: பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

தக்கலை அருகே முகமத்தூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் எல்பின் சஜிதா (33). இவர் சம்பவ தினம் கோவில்விளை என்ற பகுதியில் நடந்து செல்லும்போது, அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (40) என்பவர் எல்பின் சஜிதாவிடம் தவறாக நடக்க முயற்சி செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக...

கருங்கல்: மீன் மார்க்கெட்டை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

கருங்கல் அருகே எட்டணி என்ற சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பில் 25 ஆண்டுகளுக்கு மேலாக மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும், விபத்து உள்ளிட்ட சம்பவங்கள் நடப்பதாகவும், அதனால் மீன் மார்க்கெட் அகற்ற...