தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் கருங்கல் கிளை சிறப்பு கூட்டம் தலைவர் ஜோஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் செயலாளர் அலெக்சாண்டர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், 2024-25 கல்வி ஆண்டில் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் கருங்கல் ஆர். சி. தெருவைச் சார்ந்த ஜெய்சன் மேத்யூ மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ரிஷியா ஜான் ஆகியோருக்கு மீனவர் திலகம் விருதும் ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விருதுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காமராஜர் நாடார் தொழிலாளர் சங்க தலைவர் ராயப்பன் வழங்கினார்.