கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கீழ்குளம் மேற்கு அரசு தொடக்கப் பள்ளி கட்டிடங்கள் தற்போது பழுதடைந்து உள்ளன. இதையடுத்து நிர்வாகிகள், பெற்றோர் ஆகியோர் புதிய கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும் என கிள்ளியூர் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து தமிழ்நாடு அரசு தற்போது கீழ்குளம் மேற்கு அரசு தொடக்கப்பள்ளியில் புதிதாக 6 வகுப்பறைகள் அமைக்க கிராமப்புற உள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து ரூபாய் 71 லட்சத்து 55 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு கல்வித்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் தெரிவித்தார்.