களியக்காவிளை ஆர் சி தெருவை சேர்ந்தவர் ராஜன் மனைவி மினி (47), இந்த தம்பதிக்கு ரெனிஷ் (24) என்ற மகன் இருந்தார். ராஜன் ஏற்கனவே இறந்து விட்டார். ரெனிஷ் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் தற்போது ரெனிஷின் காதல் தோல்வியில் முடிந்தது. இதனால் கடந்த சில நாட்களாக ரெனிஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று (ஜூன் 11) திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். களியக்காவிளை போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.