கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். இதில் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வகித்தார். மாநகர நல அதிகாரி ஆல்பர் மதியரசு, நகரமைப்பு அதிகாரி வேலாயுதம், உதவி செயற் பொறியாளர் ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.