திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (40). இவர் மீது குலசேகரம், அருமனை உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஜெகன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வந்து, தற்போது அவர் களியல் பகுதியில் ஒரு வீட்டில் தங்கி இருந்து திருட்டு சம்பவங்களை நடத்தி வந்துள்ளார். இதனை அறிந்த மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர்.
இந்த பதிவை கண்ட கேரள மாநிலம் வெள்ளறடை போலீசார் ஜெகனை பிடிக்க குறி வைத்தனர். இதற்கு இடையே இன்று (ஜூன் 12) காலை கேரள மாநில எல்லை பகுதியான புலியூர் சாலையில் உள்ள கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த ஜெகனை கேரளா போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து ஜெகனை குலசேகரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.