குழித்துறை: தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை; கோர்ட் தீர்ப்பு
மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சேர்ந்தவர் மணி மனைவி மரியாராணி (39). இந்தத் தம்பதிக்கு டார்வின் என்ற மகன் உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுஜன் குமார் (51). இவருக்கும் டார்வினுக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சுஜன் குமார்...
கருங்கல்: சொத்து தகராறு – அண்ணனை தாக்கிய ரவுடி
கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் மகன் வினோ ராஜ் (42). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தற்போது இவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இவருக்கும் அவரது சகோதரர் மனோ ராஜ் (40) என்பவருக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று...
திற்பரப்பு: சாலைகள் சீரமைக்க கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்
திற்பரப்பு ஊராட்சி அலுவலகம் முன்பாக பாரதிய ஜனதா சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரியில் சிவாலயம் ஓட்டம் வருகிற 25-ம் தேதி தொடங்குகிறது. இந்த ஓட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது விழாவின் சிறப்பாகும். பன்னிரண்டு சிவாலயங்களில் திற்பரப்பு மற்றும் திருநந்திக்கரை கோவில்கள் திற்பரப்பு...
குழித்துறை: முதியவருக்கு பாட்டில் குத்து; 3 பேர் மீது வழக்கு
குழித்துறை அருகே குருமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (72) சம்பவ தினம் அந்த பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக பைக்கில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த லிட்டின் (21) சிபு (21) ஷாஜி (19) ஆகியோர் ஒரே பைக்கில் வந்து கொண்டிருந்தனர். இந்த...
களியக்காவிளை: சிவபார்வதி கோயிலில் மஹா சிவராத்திரி விழா
களியக்காவிளை அருகே உதியன்குளம்கரை செங்கல் ஊராட்சிக்குட்பட்ட மகேஸ்வரத்தில் சிவ பார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம், தேவலோகம், வைகுண்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழாவையொட்டி, விழாவின் முக்கியமான விழாவான உற்சவ பலி, கோயில் தலைவர் சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி மற்றும் கோயில் தந்திரி...
நித்திரவிளை: பைக் – கார் மோதல்; கூலி தொழிலாளி படுகாயம்
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (46). கூலித் தொழிலாளி. நேற்று மதியம் இவர் வைக்கல்லூர் பகுதியைச் சேர்ந்த பாகுலேயன் நாயர் (59) என்பவரின் பைக்கில் பின்னால் உட்கார்ந்து நித்திரவிளை பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். கூனன்விளை என்ற பகுதியில் செல்லும்போது தூத்தூர் பகுதி தாமஸ்நகரைச் சேர்ந்த...
நாகர்கோவிலில் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பொன்னப்ப நாடார் நகரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், பிரபா (48) மற்றும் லாசர்(63) ஆகியோர் பெண் ஒருவரை வைத்து பாலியல் தொழில் செய்து பணம் சம்பாதித்தது தெரியவந்தது. இது தொடர்பாக நேசமணி நகர் போலீசார் பிரபா,...
நாகர்கோவிலில் புகையிலை விற்றவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணி நகர் போலீசார் நேற்று பட்டகசாலியன் விளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் புகையிலை விற்றதாக ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த கணேசன் (வயது 57) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இரணியல்: வீட்டில் விபச்சாரம்; 2 பெண் புரோக்கர்கள் கைது
இரணியல் அருகே சுங்கான்கடை அடுத்த பனவிளை பகுதியில் ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இரணியல் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டை இன்று சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண் புரோக்கர்கள் உட்பட 3 பெண்களை...
இனயம்: 4 மீன்பிடி வள்ளங்கள் தீப்பிடித்து எரிந்து விபத்து
புதுக்கடை அருகே இனயம் கடற்கரை பகுதியை சேர்ந்தவர் அந்தோணி அடிமை (48). மீன்பிடி தொழிலாளி. இவரும் இவருடன் சேர்ந்த 4 பேரின் மீன்பிடி வள்ளங்களையும், மீன்பிடி உபகரணங்களையும் கடற்கரையில் நிறுத்தி இருந்தனர். இதில் 3 வள்ளங்கள் பதிவு பெற்றதாகும். சம்பவ தினம் 4 வள்ளங்களும், உபகரணங்களும் திடீரென...













