மார்த்தாண்டம்: காரில் குட்கா கடத்தல் 3 பேர் கைது
மார்த்தாண்டம் வழியாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை கடத்தி செல்வதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா தலைமையிலான போலீசார் விரிகோடு என்ற பகுதியில் நேற்று மாலையில் திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர்.
அப்போது விரைவாக வந்த சொகுசு...
நாகர்கோவில்: மதுபோதையில் மயங்கி கிடந்த பெயிண்டர் திடீர் சாவு
நாகர்கோவில் கோட்டார் கண்ணங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 51), பெயிண்டர். இவருக்கு சகிலா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். வெங்கடேசன் நேற்றுமுன்தினம் இரவு பறக்கை பகுதியில் உள்ள ஒரு மதுக்கடைக்குச் சென்று மது அருந்தியதாக தெரிகிறது.
பின்னர் வெங்கடேசன் சிறிது தூரம் நடந்துசென்றபோது, திடீரென...
கோட்டாரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
நாகர்கோவில் கோட்டார் போலீசார் நேற்று கம்பளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் 4 பேர் நின்று கொண்டு இருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் இருந்து 150...
தக்கலை: திருமணமான கல்லூரி மாணவி மாயம்
தக்கலை போலீஸ் சரகம் பறைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் பாபு. வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி ரோகிணி சந்திரன் (27). இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கரை ஆண்டுகள் ஆகின்றன. மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. தற்போது ரோகிணி சந்திரன் திருவிதாங்கோடு பகுதியில் உள்ள கல்லூரியில்...
வெள்ளிகோடு: சாலையோரம் மின்கம்பத்தில் மோதிய கார்
தக்கலை அருகே வெள்ளிகோடு பகுதியில் இன்று அதிகாலை திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார் கொண்டு செல்லப்பட்டு வந்தது. திடீரென அந்த காரின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த பகுதியில் உள்ள சாலையோர மின்கம்பத்தில் மோதி அருகில் இருந்த...
களியக்காவிளை: சிபிஎஸ் இயக்கம் சார்பில் வாகன பேரணி துவக்கம்
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (சி.பி.எஸ்) ஒழிப்பு இயக்கம் சார்பில் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி தமிழகம் தழுவிய வாகன பேரணி மூன்று குழுக்களாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளை, கோவை மாவட்டம் வாளையார், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் உள்ளிட்ட...
ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை
நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 0-18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு இதயநோய் கண்டறிதல் முகாம் நேற்று நடந்தது. முகாமை கல்லூரி முதல்வர் ராமலெட்சுமி தொடங்கிவைத்து பேசினார். அதன்பிறகு நடந்த முகாமில் 41 குழந்தைகளுக்கு இதய பரிசோதனை செய்யப்பட்டது. இதய நோய்களான அறிகுறிகள் உள்ள குழந்தைகளும் அழைத்து...
குமரி எஸ். பிக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் முயற்சியில் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் பொது மக்களுடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து நேசமணி நகர் காவல் நிலைய எல்லைக்குள் உட்பட்ட கிறிஸ்து நகர், ஜோதி தெரு ஆகிய பகுதிகளில் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் குறித்து...
குமரி: பெண் கவுன்சிலர் குறித்து அவதூறு; 3 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பராசக்தி கார்டனை சேர்ந்தவர் ஸ்ரீலிஜா இவர் 11-வது வார்டு கவுன்சிலராகவும், அ. தி. மு. க. வடக்கு மண்டல செயலாளராகவும் உள்ளார். ஸ்ரீலிஜா வடசேரி போலீஸ் நிலையத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், 'எனது நற்பெயருக்கு தீங்குவிளைவிக்கும் வகையில் ஈஸ்வரி...
நாகர்கோவிலில் ஆளுநரை வரவேற்ற வருவாய் அலுவலர்
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி நேற்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்ததையொட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பாலசுப்பிரமணியம் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மாலையில் கூட்டாளி மூடு பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநர்...













