தக்கலை: திருமணமான கல்லூரி மாணவி மாயம்

0
443

தக்கலை போலீஸ் சரகம் பறைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் பாபு. வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி ரோகிணி சந்திரன் (27). இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கரை ஆண்டுகள் ஆகின்றன. மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. தற்போது ரோகிணி சந்திரன் திருவிதாங்கோடு பகுதியில் உள்ள கல்லூரியில் ஒரு வருட நூலகப் படிப்பு படித்து வருகிறார். சம்பவ தினம் கல்லூரி செல்வதாக கூறி சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

 பல இடங்களில் தேடியும் அவரைக் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மாமனார் கோபாலகிருஷ்ணன் என்பவர் தக்கலை போலீசில் புகார் செய்தார். அதில் ரோகிணி சந்திரன் ஒரு வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றதாக குறிப்பிட்டுள்ளார். அந்த வாலிபர் யார்? ரோகிணி சந்திரன் எங்கே சென்றார்? என்று தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here