மார்த்தாண்டம்:   காரில் குட்கா கடத்தல் 3 பேர் கைது

0
725

மார்த்தாண்டம் வழியாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை கடத்தி செல்வதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா தலைமையிலான போலீசார் விரிகோடு என்ற பகுதியில் நேற்று மாலையில் திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். 

அப்போது விரைவாக வந்த சொகுசு காரை நிறுத்த சைகை காண்பித்தபோது, கார் நிற்காமல் சென்றது. இதை அடுத்து காரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். காரில் சோதனை செய்தபோது அதில் 250 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காருக்குள் இந்த மூன்று பேரையும் மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் விரிகோடு பகுதியை சேர்ந்த சுந்தர்லிங்கம், ஆரல்வாய்மொழி ரவி கண்ணன், திருநெல்வேலி சுப்பிரமணி என தெரியவந்தது. மூன்று பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here