அமெரிக்க ஓபன் டென்னிஸ் கால் இறுதி சுற்றில் கால் பதித்தார் அல்கராஸ்

0
20

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெ​யினின் கார்லோஸ் அல்கராஸ் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரின் 8-வது நாளான நேற்று முன்​தினம் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்​டத்​தில் 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்​பியனு​மான ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், 20-ம் நிலை வீரரான அமெரிக்​கா​வின் டாமி பாலை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்​னேறி​னார்.

7-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் டேனியல் மேத்​வ​தேவ், 11-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் பிரான்​செஸ் தியாபோவை எதிர்த்து விளை​யாடி​னார். இதில் டேனியல் மேத்​வ​தேவை 7-6 (7-1), 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்​கில் வீழ்த்தி கால் இறுதி சுற்​றில் நுழைந்​தார் பிரான்​செஸ் தியா​போ.

8-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் பென் ஷெல்​டன் 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்​கில் 53-ம் நிலை வீர​ரான கிரீஸின் ஸ்டெஃ​பானோஸ் சிட்​சி​பாஸை வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். அதேவேளை​யில் 27-ம் நிலை வீர​ரான அர்​ஜெண்​டி​னா​வின் தோமாஸ் எசட்​செவெரி 6-7 (6-8), 4-6, 4-6 என்ற செட் கணக்​கில் 46-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் அலெக்ஸ் மைக்​கேல்​சனிடம் வீழ்ந்​தார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் முதல் நிலை வீராங்​க​னை​யும் நடப்பு சாம்​பியனு​மான பெலாரஸின் அரினா சபலென்கா 6-4, 6-3 என்ற செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் டெய்​லர் டவுன்​சென்டை வீழ்த்தி கால் இறுதி சுற்​றில் கால் பதித்​தார். 6-ம் நிலை வீராங்​க​னை​யான செக் குடியரசின் லின்டா நோஸ்​கோவா 7-5, 5-7, 6-4 என்ற செட் கணக்​கில் 11-ம் நிலை வீராங்​க​னை​யான உக்​ரைனின் மார்தா கோஸ்ட்​யுக்கை வீழ்த்தி கால் இறுதி சுற்​றில் நுழைந்​தார்.

3-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா 6-3, 6-4 என்ற செட் கணக்​கில் 16-ம் நிலை வீராங்​க​னை​யான ருமேனி​யா​வின் சொர்னா கிறிஸ்​டி​யா​வை​யும், 26-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் எம்மா நவர்ரோ 6-4, 6-2 என்ற செட் கணக்​கில் 21-ம் நிலை வீராங்​க​னை​யான ரஷ்​யா​வின் அனா கலின்​ஸ்​க​யா​வை​யும் வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினர்.

ஸ்ரீராம் பாலாஜி ஜோடி தோல்வி

ஆடவருக்​கான இரட்​டையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் ஸ்ரீராம் பாலாஜி, அமெரிக்​கா​வின் இவான் கிங் ஜோடி 4-6, 5-7 என்ற செட் கணக்​கில் போட்​டித் தரவரிசை​யில் 12-வது இடத்​தில் உள்ள பிரான்​ஸின் எட்​வர்ட் ரோஜர் வாசலின், மோனாக்​கோ​வின் ஹியூகோ நிஸ் ஜோடி​யிடம் தோல்வி அடைந்​தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here