நிபா வைரஸ் பரவல்: தமிழக, கேரள எல்லையில் தொடரும் கண்காணிப்பு

0
64

கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட சுகாதாரஅலுவலர் முரளி சங்கர் உத்தரவின் பேரில், தமிழக – கேரள எல்லையான ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியில் வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில் மருத்துவக் குழுவினர் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவ அலுவலர் ஆனந்தகுமார் கூறும்போது, “தமிழகத்துக்கு வந்த யாருக்கும் இதுவரைநிபா காய்ச்சல் பாதிப்பு கண்டறி யப்படவில்லை. ஒன்பதாறு செக் போஸ்ட்டில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, அதில் பயணம் செய்த 990 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here