குமரி: கடலில் மிதந்த மாணவனின் சடலம்; பரபரப்பு

0
212

வள்ளவிளை அருகே மஞ்சத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரிற்றில் ரோய் (16). இவர் தூத்தூர் கடற்கரை பகுதியில் உள்ள பயஸ் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவருக்கு கால்பந்து விளையாடுவதில் மிகவும் ஆர்வம் உள்ளதாக கூறப்படுகிறது. இவரும் இவரின் நண்பர்கள் இருவரும் சேர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (11-ம் தேதி ) பொழியூர் பொழிமுகத்துக்கு சென்றுள்ளனர். பொழிமுகத்தின் மறுகரையில் கால்பந்து விளையாடுவதை பார்த்து இவர்கள் மூன்று பேரும் பொழி முகத்தை கடந்து கால்பந்து விளையாடும் மைதானத்திற்கு செல்ல முயற்சித்தனர்.

அப்பொழுது திடீர்னு இந்த மாணவன் நடுப்பகுதி வரும்போது மாயமாய் உள்ளார். இது குறித்து உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார்கள் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வந்தனர். நான்கு நாட்களாகியும் மாணவனுடைய உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலையில் தேங்காப்பட்டணம் கடலில் ஒரு மாணவனுடைய உடல் மிதப்பதாக மீனவர்கள் புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே புதுக்கடை போலீசார் சம்பவ இடம் சென்று மாணவனின் உடலை கைப்பற்றி இந்த மாணவன் கேரள மாநிலத்தில் மாயமான மாணவன் என கண்டறிந்தனர். அதன் பின்னர் இந்த மாணவனுடைய உடல் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here