கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் 52 வார்டுகளிலும் பழுதடைந்து காணப்பட்ட பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. தார் சாலையாகவும், கான்கிரீட் தளமாகவும் போடப்பட்டு வருகின்றன. அவ்வாறு சீரமைக்கப்பட்ட சாலைகளைஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அந்த வகையில் தம்மத்துக்கோணம், வண்ணான்விளை, ஆயுதப்படை மைதான சாலை மற்றும் பிள்ளையார்புரம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். ஒப்பந்தத்தில் கூறப்பட்ட அளவில் சாலை உயரம் உள்ளதா? சாலையானது தரமானதாக போடப்பட்டு உள்ளதா என்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.