2017 மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்ற போது இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் கிருணல் பாண்டியா. ஆர்சிபி அணி முதன் முறையாக கடந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற போதும் இறுதிப்போட்டி ஆட்ட நாயகன் கிருணல் பாண்டியா. நடப்பு சீசனிலும் பிரமாதமாக வீசி வருகிறார். ஸ்பின்னர் பவுன்சரை ஓர் பிரதான உத்தியாகப் பயன்படுத்துவதில் கிருணல் பாண்டியா இடது கை ஸ்பின் பவுலிங்குக்கு ஒரு புதிய பரிமாணத்தையே வழங்குகிறார் என்றால்...
வான்கடேயில் நேற்று நடைபெற்ற ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2026 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலவீனம் சூறையாடப்பட்டது என்றே கூற வேண்டும். கடைசியில் ஷெர்ஃபானே ரூதர்போர்ட் 9 சிக்சர்க்ளுடன் 31 பந்துகளில் 71 ரன்கள் விளாசவில்லை எனில் மும்பை இந்தியன்ஸ் பெரிய தோல்வியை சந்தித்திருக்கும். 16-வது ஓவரில் நமன் தீர் 1 ரன்னில் ஆட்டமிழக்கும் போது ஸ்கோர் 154 ரன்களாக இருந்தது. ஓவருக்கு 10 ரன்கள்...
ஐபிஎல் தொடரில் நேற்று நியூ சண்​டிகரில் உள்ள முலான்​பூரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன்ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் - பஞ்​சாப் கிங்ஸ் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த ஹைத​ரா​பாத் அணி 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 219 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா 28 பந்​துகளில், 8 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 74 ரன்​கள் விளாசி​னார். மற்​றொரு தொடக்க வீர​ரான டிரா​விஸ் ஹெட் 23 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5...
ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்​பாக்​கம் எம்.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே - டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​கள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி​யின் கேப்​டன் அக்​சர் படேல் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்​சன் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். பவர்​பிளே​வில் சிஎஸ்கே அணி 61 ரன்​கள் குவித்​தது. நிதான​மாக விளை​யாடிய ருது​ராஜ் கெய்க்​வாட் 18 பந்​துகளில், ஒரு பவுண்​டரி​யுடன் 15...
நடப்பு ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், ஆர்சிபி தொடக்க வீரர் ஃபில் சால்ட் மற்றும் விராட் கோலி ஜோடி மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. சால்ட் வெறும் 36 பந்துகளில் 78...
டெல்லி கேப்​பிடல்ஸ் அணிக்​கெ​தி​ரான ஐபிஎல் லீக் ஆட்​டத்​தில் பந்​து​வீச கூடு​தல் நேரம் எடுத்​துக் கொண்டதற்​காக சிஎஸ்கே அணி​யின் கேப்​டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது. சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நேற்று முன்​தினம் சிஎஸ்​கே- டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​கள் மோதின. இதில் சிஎஸ்கே 23 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இந்தப் போட்​டி​யின்​போது, சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி வீரர்​கள் குறிப்​பிட்ட நேரத்​துக்​குள் ஓவர்​களை வீசி முடிக்​க​வில்​லை. இதனால் அணி...
சென்னை கால்பந்து சங்​கம் சார்​பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டி செனாய் நகரில் உள்ள பாவேந்​தர் பார​தி​தாசன் கால்​பந்து மைதானத்​தில் நடைபெற்று வரு​கிறது. நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஏஜிஓஆர்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வருமான வரித்துறை அணியை வீழ்த்தியது. ஏஜிஓஆர்சி அணி சார்பில் ரக்சில் (2-வது நிமிடம்), ஹலிசோ (8-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். வருமான வரித்துறை அணி சார்பில் நரேஷ்,...
“என் மகனின் கிரிக்கெட் பயணத்துக்காக வீட்டை விற்றேன்” என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் முகுல் சவுத்ரியின் தந்தை தலிப் சவுத்ரி தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உடனான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. இதில் லக்னோ வீரர் முகுல் சவுத்ரியின் பங்கு மிக முக்கியமானது. 27 பந்துகளில் 54 ரன்களை அவர் விளாசி இருந்தார்....
ஐபிஎல் 2026 தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தனது ஆதிக்கத்தைத் தொடர்கிறது டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பெங்களூரு அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது; பில் சால்ட் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். விராட் கோலி (32) நிதானமாக ஆட முயன்ற போதிலும், ரவி பிஷ்னோய்...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சென்னை சூப்​பர் கிங்​ஸ், டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யுடன் மோதுகிறது. தொடக்க வீரர்​களான சஞ்சு சாம்​சன், ருதுராஜ் கெய்க்​வாட் ஆகியோர் நெருக்​கடி​யுடன் களமிறங்​கு​கின்​றனர். ருது​ராஜ் கெய்க்​வாட் தலை​மையி​லான சிஎஸ்கே அணி நடப்பு தொடரில் தொடர்ச்​சி​யாக 3 ஆட்​டங்​களில் தோல்​வியடைந்​துள்​ளது. தொடக்க ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி​யிடம் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும், 2-வது...