அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் 5-வது சீசன் போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 7-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ், ஜெய்ப்பூர் பாட்ரியாட்ஸ் ஆகிய இரு அணிகள் புதிதாக களமிறங்க உள்ளன. இவற்றுடன் நடப்பு சாம்பியனான கோவா சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான சென்னை லயன்ஸ், தபாங் டெல்லி டிடிசி, யு மும்பா டிடி, புனேரி பல்தான், பிபிஜி பெங்களூரு...
17 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் ஜோர்டான் நாட்டில் உள்ள அம்மான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 110 கிலோ எடை கிரகோ ரோமன் பிரிவில் இந்திய வீரர் ரோனக் தஹியா வெண் கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் துருக்கியின் எம்ருல்லா கப்கனுடன் மோதினார். இந்த மோதலில் ரோனக் தஹியா 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட்கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. மழைகாரணமாக தாமதமாக தொடங்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 16 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்துல்லா ஷபிக் 2, கேப்டன் ஷான் மசூத் 6, பாபர் அஸம் 0 ரன்களில் நடையை கட்டினர்.
4-வது விக்கெட்டுக்கு சைம் அயூப்புடன் இணைந்த சவுத் சகீல் ஆட்டத்தை முன்னெடுத்துச்...
பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தது. இந்த அணியில் கேரளாவைச் சேர்ந்த கோல்கீப்பரான பி.ஆர்.ஸ்ரீஜேஷ் முக்கிய பங்கு வகித்திருந்தார். இந்நிலையில் கேரள அரசு சார்பில் அவருக்கு ரூ.2 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவு முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
ஆடவருக்கான ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான கிழக்கு ஆசிய-பசிபிக் பிராந்திய தகுதிச் சுற்று போட்டி சமாவோ நாட்டின் தலைநகரான அபியாவில் நடைபெற்றது. இதில் சமாவோ - வனுவாட்டு அணிகள் மோதின. முதலில் பேட்செய்த சமாவோ 174 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் பேட்ஸ்மேனான டேரியஸ் விசர் 62 பந்துகளில், 14 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி...
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இன்ஸடாகிராம் தளத்தில் பகிர்ந்துள்ள ஸ்டோரி நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு தேசம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அவரது ஸ்டோரி அந்த கருத்தை ஒட்டி பகிரப்பட்டுள்ளதாக தெரிகிறது.
“உங்களின் மகளை காக்கவும். (அதை ஸ்ட்ரைக் செய்த ஃபான்ட்டில் பதிவு செய்துள்ளார்). உங்களின் மகன், சகோதரர், தந்தை, கணவர், நண்பர்களுக்கு கற்பியுங்கள்”...
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. நேற்று முன்தினம் முடிவடைந்த மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என வென்று தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டுள்ளது. இதில் தொடரை இழந்த...
மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் 2-வது டெஸ்ட்: 40 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
admin - 0
மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடனான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. மேற்கு இந்தியத் தீவுகளில் தென் ஆப்பிரிக்க அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளிடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் கயானாவில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது.
முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 160 ரன்களும், மேற்கு...
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி 150-வது ஆண்டு நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் மெல்பர்ன் நகரில் 2027-ல் சிறப்பு போட்டி நடைபெறவுள்ளது. 2027-ல் நடைபெறும் இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
1877-ம் ஆண்டு மார்ச் மாதம் முதலாவது போட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
இதையடுத்து, டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகமாகி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும்...
எடை குறைப்பு பயிற்சிகளால் வினேஷ் போகத் இறந்துவிடுவாரோ என பயந்தேன்: மனம் திறக்கும் பயிற்சியாளர் வோலர் அகோஸ்
admin - 0
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் போது எடை குறைப்புக்காக இந்திய மல்யுத்த வீராங்கனை விடிய விடிய மேற்கொண்ட பயிற்சிகளால் அவர், இறந்துவிடுவாரோ என பயந்ததாக அவருடைய பயிற்சியாளரான ஹங்கேரியைச் சேர்ந்த வோலர் அகோஸ் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்தார். ஆனால் இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடத்தப்பட்ட எடை பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட வினேஷ்...










