உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா

0
130

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. நேற்று முன்தினம் முடிவடைந்த மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என வென்று தொடரை கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டுள்ளது. இதில் தொடரை இழந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.அதே நேரத்தில் இந்தப் பட்டியலில் இந்தியஅணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 6 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 74 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், நியூஸிலாந்து 3-வது இடத்திலும், இலங்கை 4-வது இடத்திலும் உள்ளன. தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் முறையே 5 முதல் 9 இடங்களைப் பிடித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here