டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி 150-வது ஆண்டு நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் மெல்பர்ன் நகரில் 2027-ல் சிறப்பு போட்டி நடைபெறவுள்ளது. 2027-ல் நடைபெறும் இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
1877-ம் ஆண்டு மார்ச் மாதம் முதலாவது போட்டி ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
இதையடுத்து, டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகமாகி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 1977-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.