ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - ஒடிசா எஃப்சி அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணி கோல் அடித்து அசத்தியது. 48-வது நிமிடத்தில் ஒடிசா அணியின் கோல்கீப்பர் அம்ரிந்தர் சிங் தனது பகுதியில் இருந்து புய்தியாவுக்கு பந்தை...
அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான போட்டியை புறக்கணிக்க வேண்டுமென்ற கருத்தை தான் ஆதரிப்பதாக தென் ஆப்பிரிக்க நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சியின் கீழ் கல்வி, விளையாட்டு உட்பட பெண்களுக்கான பல்வேறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த அணியுடன் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதை இங்கிலாந்து கிரிக்கெட்...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனதாக்கிக் கொண்டார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-3 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீரின் கள வியூகம், அணி தேர்வு உள்ளிட்டவை...
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - ஒடிசா எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி வெற்றி பெற்றால், லீக் வரலாற்றில் முதன்முறையாக ஒடிசா எஃப்சி அணியை இரு முறை வீழ்த்தி சாதனை படைக்கலாம். கடந்த செப்டம்பர் மாதம் ஒடிசாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அந்த அணியை 3-2 என்ற...
டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டிலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் ஜஸ்பிரீத் பும்ரா 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தை, ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்டுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸையும் சேர்த்து 10 விக்கெட்களை வீழ்த்திய ஸ்காட் போலண்ட்...
மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், மாளவிகா பன்சோட் ஆகியோர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், கனடாவின் பிரையன் யாங்கை எதிர்த்து விளையாடினார். இதில் பிரணாய் 21-12, 17-21, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் பிரணாய்,...
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியின் உடற்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான டிடிஜிடி ஒலிம்பியாட் மாநில அளவிலான கபடி போட்டி கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. 10 அணிகள் கலந்து கொண் இந்தத் தொடரில் விருகம்பாக்கத்தில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் 50-23 என்ற கணக்கில் மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா அணியை வீழ்த்தியது.
வெற்றி பெற்ற...
இலங்கை அணிக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை நியூஸிலாந்து அணி 2-0 என தன்வசப்படுத்தியது.
ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக 37 ஓவர்களை கொண்டதாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 37 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு...
நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பனோ ஆலிவெட்டி ஜோடி 6-4 6-4 என்ற நேர் செட் கணக்கில் நெதர்லாந்தின் சாண்டர் அரெண்ட்ஸ், இங்கிலாந்தின் லூக் ஜான்சன் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில்...
மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் உள்ள ஆக்ஸியாட்டா அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், கனடாவின் பிரையன் யாங்கை எதிர்த்து விளையாடினார். இதில் பிரணாய் 21-12, 6-3 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்த போது மழை காரணமாக மேற்கூரை ஒழுகியது.
ஆடுகளத்தின் இடது பகுதியில் மழைநீர் தேங்கத் தொடங்கியதால் போட்டி நடுவரிடம் பிரணாய் புகார் தெரிவித்தார்....










