ஒன்றுமில்லாமல் உதிர்ந்து போய்க் கொண்டிருக்கும், ஆப்பிரிக்க எழுத்தாளர் சினுவா ஆச்சிபி எழுதிய ‘Things fall apart’ நாவல் தலைப்பை நினைவூட்டும் பாகிஸ்தான் அணிக்கு உத்வேகமூட்டும் புத்துணர்வூட்டும் புதிய ஆல்ரவுண்டராக 21 வயதேயான ரஸாவுல்லா உதயமாகி உள்ளார். நேற்று பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இறங்கினார் ரஸாவுல்லா. 63 பந்துகளில் 4 பவுண்டரிகள், 9 சிச்ஸர்கள் என்று இங்கிலாந்து பவுலிங்கைப் புரட்டி எடுத்து 81 ரன்களை...
டே​விஸ் கோப்பை டென்​னிஸ் தொடரின் தகுதி சுற்று 2-ல் இந்​தியா - கொரியா அணி​கள் வரும் 19-ம் தேதி மோத உள்​ளன. இந்த ஆட்​டம் சியோல் நகரில் நடை​பெற உள்​ளது. இந்​தத் தொடரில் கலந்​து​கொள்​வதற்​காக இந்திய அணி​யின் ஒரு குழு​வினர் நேற்று முன்​தினம் சியோல் புறப்​பட்​டுச் சென்​றனர். இதில் இரட்​டையர் பிரிவு வீர​ரான யுகி பாம்ப்ரி பயணிக்​க​வில்​லை. அமெரிக்க ஓபன் பிர​தான சுற்​றுக்கு முன்​ன​தாக பயிற்​சி​யில் ஈடு​பட்ட போது யுகி பாம்ப்​ரிக்கு...
அமெரிக்க ஓபன் டென்​னிஸ் தொடரில் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் கஜகஸ்​தானின் எலெனா ரைபகினா இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார். அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரின் 12-வது நாளான நேற்று முன்​தினம் மகளிர் ஒற்​றையர் பிரிவு அரை இறுதி ஆட்​டம் ஒன்​றில் 2-ம் நிலை வீராங்​க​னை​யான கஜகஸ்​தானின் எலெனா ரைபகி​னா, 4-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் கோ கோ காஃபுடன் மோதி​னார். இதில் முதல் செட்டை 3-6 என...
இங்​கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 130 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கியப்பட்டுள்ளது. பர்​மிங்​காமில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் முதலில் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 33.5 ஓவர்​களில் 133 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக சவுத் ஷகீல் 43 ரன்​கள் எடுத்​தார். இதையடுத்து விளை​யாடிய இங்​கிலாந்து அணி 453 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. 320 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை...
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் சயீம் அயூப் என்ற பேட்டரை பாகிஸ்தான் அணி திடீரென அழைத்து, அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அடித்ததையும் 2011-ல் சேவாக் இதே போல் அழைக்கப்பட்டு எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அடித்ததையும் தராதரமற்ற ஒப்பீடு செய்துள்ளார் முன்னாள் இங்கிலாந்து கேப்டனும் தற்போதைய வர்ணனையாளருமான நாசர் ஹுசைன். சயீம் அயூபை நேரடியாக பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20-யிலிருந்து டெஸ்ட்...
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலம் - தென் மண்டலம் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வந்தன. இதன் முதல் இன்னிங்ஸில் கிழக்கு மண்டலம் 708 ரன்கள் குவித்தது. கேப்டன் இஷான் கிஷன் 270 ரன்களும், குமார் குஷாக்ரா 101 ரன்களும் விளாசினர். இதையடுத்து விளையாடிய தென் மண்டலம் அணி 107.3 ஓவர்களில் 336 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் திலக்...
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், பத்ம டாக்டர் பி.சிவந்தி ஆதித்தனார் கோப்பைக்கான தமிழ்நாடு மாநில அளவிலான பள்ளி மாணவர் மற்றும் மாணவிகளுக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டி வரும் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2 வரை சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு ஸ்டேடியம் மற்றும் எழும்பூரில் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் ஆகிய இரு இடங்களில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மாநில வாலிபால்...
பிரேசில் - இந்தியா ஆடவர் கால்பந்து அணிகள் இடையிலான நட்புரீதியிலான சர்வதேச போட்டி வரும் அக்டோபர் 3-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான 25 பேர் கொண்ட பிரேசில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வினிசியஸ் ஜூனியர், ராஃபின்ஹா, மார்க்வினோஸ் ஆகியோர் அனுபவமிக்க முக்கிய வீரர்களாக உள்ளனர். இதில் மார்க்வினோஸ் கேப்டனாக தொடர்கிறார். உலகக் கோப்பை தொடரில் கோல்கீப்பர்களாக இருந்த அலிசன், எடர்சன்,...
நடப்பு மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது. இந்த தொடரில் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அரையிறுதியில் வங்கதேசத்துடன் இந்திய அணி நேற்று (வியாழக்கிழமை) விளையாடியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி,...
இந்திய அணிக்காக கடைசியாக 2025-ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பார்த்தது ஷமி பவுலிங்கை. டெஸ்ட் போட்டி கடைசியாக ஆடியது 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப். இவரை அணியில் இருந்து ஒதுக்கி வைக்க இதுவரை முறையான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கிரிக்கெட் அல்லாத காரணங்களே பிரதானமாக இருக்கலாம் என்று நம்மை ஐயம் கொள்ளச் செய்கிறது அணித் தேர்வுக்குழு, பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன்கள் ஆகியோரது கள்ள மவுனம். சென்னை சேப்பாக்கத்தில்...