எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 130 ரன்கள் இலக்கு

0
22

இங்​கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 130 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கியப்பட்டுள்ளது.

பர்​மிங்​காமில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் முதலில் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 33.5 ஓவர்​களில் 133 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக சவுத் ஷகீல் 43 ரன்​கள் எடுத்​தார். இதையடுத்து விளை​யாடிய இங்​கிலாந்து அணி 453 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது.

320 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய பாகிஸ்​தான் 2-வது நாள் ஆட்​டத்​தின் முடிவில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 52 ரன்​கள் எடுத்​தது. அஸான் அவாய்ஸ் 29, ஷான் மசூத் 21 ரன்​களு​ட​னும் களத்​தில் இருந்​தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை பாகிஸ்​தான் அணி தொடர்ந்து விளை​யாடியது. அஸான் அவாய்ஸ் 59 ரன்​கள் எடுத்த நிலை​யில் லாரன்ஸ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இந்த ஜோடி 125 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து களமிறங்​கிய கேப்​டன் பாபர் அஸம், ஷான் மசூத்​துடன் இணைந்து பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைக்க முயற்​சித்​தார். ஷான் மசூத் 148 பந்​துகளில், 12 பவுண்​டரி​களு​டன் 95 ரன்​களும், பாபர் அஸம் 103 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 11 பவுண்​டரி​களு​டன் 76 ரன்​களும் எடுத்த நிலை​யில் ஆட்​ட​மிழந்​தனர். இந்த ஜோடி 4-வது விக்​கெட்​டுக்கு 89 ரன்​கள் சேர்த்​தது. 67 ஓவர்​கள் வீசப்​பட்ட நிலை​யில் பாகிஸ்​தான் அணி 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 297 ரன்​கள் எடுத்​திருந்​தது.

21 வயதான ரஸாவுல்லா, 63 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். அவர் 9 சிக்ஸர்களை விளாசி இருந்தார். இது சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு முதல் டெஸ்ட் போட்டியாக அமைந்தது. முகமது அப்பாஸ் 42 ரன்கள் எடுத்தார்.

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 96.4 ஓவர்களில் 449 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான் அணி. இதன் மூலம் இங்கிலாந்தில் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது பாகிஸ்தான். முதல் இடத்தில் 542 ரன்கள் உடன் இங்கிலாந்து உள்ளது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 397 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்த ஆட்டம் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணியால் ஒரே நாளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் வரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது பாகிஸ்தான். கடந்த 2005-ல் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரே நாளில் 407 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி.

பாகிஸ்தான் அணிக்கு இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் பேட்டிங்கில் அந்த அணியின் திறனை வெளிக்காட்டும் வகையில் அமைந்தது. இந்த இன்னிங்ஸிற்கு முன்பு பாகிஸ்தான் அணி விளையாடிய 5 இன்னிங்ஸில் 200 ரன்களை கூட எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here